தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தர்மம்தலை காக்கும் ! தக்க சமயத்தில் உயிர்காக்கும் !!

மக்கள்தொண்டன் பாயிஸ்
நான் ஒரு சமயம் தராசு பத்திரிகையில் விழுப்புரம் மாவட்ட செய்தியாளராக இருந்தபோது'''அல்மதீனா ஹோட்டல் என்ற இரவு நேர உணவு விடுதி வைத்து நடத்தினேன்''
அப்போது எனது ஊரை சார்ந்த சகோதரர்கள் சிலர் வேலை செய்தார்கள் ''
அப்போது சமுதாய அமைப்பில்ஒன்றில் பொருபிலிருந்தேன் ''
இரவு ஹோட்டல் பணியை முடித்துவிட்டு கடைபொறுப்பை ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு இரவு 11:30''மணிஇருக்கும் விழுப்புரதிலிருந்து எனது இருசக்கர வாகனத்தில் அடுத்தநாள் திண்டிவனம் நிர்வாகிகள் தேர்விற்காக இரவே பயணித்து என் அண்ணன் வீட்டில் தங்கிவிட்டு காலையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் என்று எண்ணி புறப்பட்டேன் கடையில் வேலை பார்த்தஅசதியில் கடுமையான உடல் சோர்வு அப்போதெல்லாம் இருவழி சாலைதான் சாலைகளும் ஆங்காங்கே குன்றும் குழியுமாக இருக்கும்''
அப்போது விக்கிரவாண்டி என்ற ஊரிற்கு ஒரு ஐந்துகிலோ மீட்டருக்கு முன்பு தூக்கம்மேலிட நடுசாலையில்உடைந்து கிடந்த பல்லத்தில் என் வாகனம் கிடதியத்தில் என்னை தூக்கிவீசப்பட்டு  நடுரோடில் இறந்த பிணம்போல் கிடக்குறேன்''1நிமிட இடைவேளையில் விழுப்புரம்to சென்னை சாலையில் எவ்வளவு போக்குவரத்துநெரிசல் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் உணர்வில்லாமல் நடுசாலையில் கிடக்கிறேன் 20நிமிடங்களுக்கு மேல் என்னுடைய வாகனம் சினிமா பணியில் சாலையை கடந்து கிடக்கிறது ஆயிரகணக்கான வாகனங்கள் என்னை பதம்பார்க்காமல் நெடுஞ்சாலையில் ஒதுங்கிசெல்கிறது''வாகனத்தில் சென்றவர்கள் எல்லாம் யாரோ ஒரு இளைஞர் இறந்துகிடகிறார் என்று நினைத்திருபார்கள்''' என்னுடைய உறவுகளே என்துனையோபேர் அந்த வாகனகளில் சென்றிருப்பார்கள்'' ஆனால் ஒருகணம் யாருக்குமே சாலையில் அடிபட்டுகிடக்கின்ற இந்த இளைஞனுக்கு உயிர் இருகிறதா என்றுதோன்றவில்லை '''
இறைவன் மிகபெரியவன் தர்மம் தலைகாக்கும் தக்கசமயத்தில் உயிர்காக்கும் என்பார்கள்''''
நான் தர்மம் செய்ய எனக்கு இறைவன் பெரிய பொருளாதரத்தை தரவிடிலும் என்னால் பிறமக்கள் மூலம் உதவிசெய்ய இறைவன்நாடி இருக்கிறான்'''
நான் அன்று செய்த மிக பெரிய தர்மம் என்ன தெரியுமா ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ரத்த தானம் செய்வது எனதுகொள்கையாகவும் பிற இளைஞர்களை ஊக்குவிக்கும் செயல்படும்செய்துவந்தேன்''என்னுடைய இறைவனின் அன்பிற்காக(நெருகதிற்காக)செய்த தர்மம் நான் நாதியற்று கிடக்கையில் உதவியது '''
ஆயிறகணக்கான வாகனங்களில் சென்றவர்களில் எந்தவாகனமும் எனக்கு உதவிசெய்யவராதநிலையில்'''
என்னைப்போல் ஒரு இளைஞன் இறைவனால் அனுப்பப்பட்டார் என்றுதான் கூறவேண்டும் ஒரு தனியார் பேருந்தில் கூட்டையூர்பட்டு சென்றுகொண்டிருந்தவர் முஸ்லீம்மல்லாத அந்த ஒரு மனிதருக்கு தோன்றியது டிரைவரைவண்டியை நிறுத்தும்படி சொல்கிறார் டிரைவரும் உனகேனப்பபா இந்த வம்பு போலீசு கேசுண்டு பிரச்சினைவரும் யாரோ வண்டிக்காரன் அடித்துபோட்டு சென்றுள்ளர்கள் வேண்டாம் வம்புபோகலாம் என்று கூறியுள்ளார் ஓட்டுனர்''''உடனே எதுவாக இருந்தாலும் நான் பார்த்துகொள்கிறேன் முதலில் வண்டியைநிறுத்து என்றுள்ளார் அந்த இளைஞர் வண்டியைநிறுத்த உடனே இறங்கிவந்து குப்புறகிடந்த என்னை நிமிர்த்திபார்கிறார் முகமேஇல்லாத அளவிற்கு அடிபட்டுகிடக்கிறேன்'' உயிர்இருக்கிறதா என்று பார்கிறார் உயிர் இருக்கிறது உடனே ஓட்டுனரிடமிருந்து தண்ணீரைவாங்கி என்முகத்தில் தெளிக்க லேசாககண்விழிக்க என்னைஎன் முகவரி கேட்டிருகிறார் அப்போதும் எனக்குஎந்தசுயநினைவுமில்லை'உடனே என் பாக்கெட்டில் இருந்த press கார்டைபார்கிறார் என் அண்ணனின்வீட்டு  முகவரி கொடுக்கபடிறுந்தது உடனே பேருந்தில் என்னை ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டியில் முதலுதவி சிகிச்சை செய்கிறார்''அவர் இறங்கவேண்டிய ஊரையும் கடந்து திண்டிவனம் கொண்டுவருகிறார்''திண்டிவனதிலிருந்து ஆட்டோவில் ஏற்றிகொண்டு என்அண்ணன் வீடு வருகிறார் வந்திறங்கியதுமே எனக்கு நினைவு திரும்பியது கதவைத்தட்டியதும் கதவை திறந்தஎன் அண்ணனுக்கும் அன்னிக்கும் என்னை சரியாகஅடையலாம் தெரியவில்லை அந்த அளவிற்கு கொடூரமான முகமாக வீங்கிஇருந்தது''இதுபோல் நடந்த விஷத்தை அந்த சகோதரர் வீட்டில் கூற வீட்டில் உள்ளவர்கள் கண்கலங்கியபடி அந்த இளைஞருக்கு என் அண்ணனும்அன்னியும் நன்றிகூருகிறார்''பரவாஇல்லை என்று பெரும்தன்மையோடு அவர்கூற அவர் செய்த உதவிக்கும் அவர் செய்த செலவிற்கும் பணம்ஒன்று இடாகுமோ !  கொடுத்தற்கு என்னுடைய மனிதநேயத்திற்கு விலைகொடுகாதீர்கள் என்றார் கடைசிவரை அவர் எனக்காக செய்தசெலவுகளை வாங்கவில்லை'''
ஒரு சாமானிய பாட்டாளிதான் அவர் '''
எத்தனையோ மனிதர்கள் உதவிசெய்திருப்பார்கள் ! இந்த சகோதரர் முதலுதவிக்கு சேர்த்ததோடுசம்மந்தப்பட்டவர்களுக்கு கால்செய்து தங்களுடைய உதவியை முடிதுகொள்வார்கள்''
ஆனால் எனக்கு உதவிய அந்த உயர்ந்த உள்ளத்தை நான் பதினெட்டு ஆண்டுகள் கடந்தும் நினைத்துபார்கிறேன் '''இதுவே எனக்கு அதிகம் மக்கள் பணிசெய்ய தூண்டுகோளாக இருந்தது '''அந்த சகோதரற்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்'''!
எனவே சகோதரர்களே நீங்களும் அந்த உயர்ந்த உள்ளத்திற்காக பிரார்த்திப்பீர் !!
அவரைப்போல் நல்ல உள்ளம்கொண்ட மக்களாக மக்களின் அன்பைபெறுவோம் !!!!!!
மக்கள்தொண்டன் பாயிஸ்

Post a Comment

0 Comments