தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு தடை வடமாநிலங்களில் இருந்து இறக்குமதியாகும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ....

தமிழகத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து அதற்கான உத்தரவுகளை அந்தந்த மாவட்ட காவல்துறை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதசார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் காந்தியை கொலை செய்து பயங்கரவாத செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வரும் ஆர் எஸ் எஸ் ஐ தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தொடர்ந்து  RSS ள் அணிவகுப்புக்கு அனுமதி கொடுத்தால் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் மத பயங்கரவாத செயல்களுக்கு ஊக்கம் கொடுப்பதாககிவிடும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது ...


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் ...
உயர்நீதிமன்றம்  RSS ள் பேரணிக்கு அனுமதி அளித்து. தவறான முடிவு ...
  RSS ள் பின்னணி பற்றி தெரியாமல் கொடுக்கப்பட்ட தீர்ப்பு  இதை திரும்பப் பெற வேண்டும் இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது ஆர்எஸ்எஸ் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து மத பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.
வடமாநிலங்களில் மத ஒற்றுமை சிதைக்கப்பட்டுள்ளநிலையில் தமிழகத்திலும் அதை விதைக்க நினைக்கிறார்கள்.
என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில்தான்  இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்த PFI பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை மத காழ்ப்புணர்வு காரணமாக மத்திய அரசு தடை செய்துள்ளது.  
இந்த அமைப்பு கடந்த காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு பேரிடர்கள் மற்றும் இந்தியா முழுவதும் ஏற்பட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளில் முழு அர்ப்பணிப்போடு செயலாற்றி வந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சேவை அமைப்பை திட்டமிட்டு வேண்டுமென்றே தடை செய்துள்ளது மத்திய அரசு ...
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடரலாம் என்ற அடிப்படையில்  வடமாநிலங்களில் பேரணி என்ற பெயரில் தொடர்ந்து விஹெச்பி ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு மோசமான மதக்கலவரங்களை செய்தது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. அது போன்ற நிகழ்வுகள் இங்கு தமிழகத்திலும் நடக்கக்கூடாது என்ற அடிப்படையில்  தமிழக அரசு அந்தந்த மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஆர்எஸ்எஸின் அணிவகுப்பிற்கு தடை விதித்துள்ளது.

வட மாநிலங்களிலிருந்து இறக்குமதியாகும் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் ...
இதனைத்தொடர்ந்து ஆர்எஸ்எஸ் தன்னுடைய சக பயிற்சி பெற்ற ஆர்எஸ்எஸ் ஊழியர்களை பெருமளவு தமிழகத்தில் இறக்கி உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

தமிழக அரசிற்கு தொடர்ந்து அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு பாஜக மற்றும் சங்பரிவார் சக்திகள் முயற்சித்து வரும் நிலையில் தமிழக அரசு பொறுப்போடு செயல்பட்டு ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளை கவனமாக கையாள வேண்டும் என்று மத ஒற்றுமையை விரும்பும் மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர். 

Post a Comment

0 Comments