தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

மிக மோசமான சூழ்நிலையில் தொண்டி ஆரம்ப சுகாதார நிலையம் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் ....

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  இங்கு அதிகமான அளவில் நோயாளிகள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வருகிறார்.  குறிப்பாக இரவு நேரங்களில் திடீர் விபத்துக்கள், பாம்புக்கடி நாய்க்கடி, போன்ற பாதிப்புகளில் பாதிக்கப்படும் பொதுமக்கள் முதலுதவி சிகிச்சைக்காக வரும் நிலையில் மருத்துவர் இல்லாத அவலநிலை தொடர்ந்து வருகிறது.  இதனால் தொடர்ந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
அதிகமான பிரசவங்கள் இங்கு நடைபெற்று வரும் நிலையில் பெண் மருத்துவர் இல்லாத அவலநிலைதொடர்கிறது.
கடந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வந்த சுகாதார நிலையம்  ஐந்து மருத்துவர்கள் கொண்டு செயல்பட்டு 24 மணிநேரமும் முதலுதவி சிகிச்சை அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது ஒரு மருத்துவர் மட்டும் வைத்து செயல்படும் நிலையில் மிக மோசமான சூழ்நிலையில் பொதுமக்கள் போதிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.  ஒரு நேரத்தில் அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த தொண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்  .
மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கான மருத்துவர்கள் கூட இல்லாத அவல நிலையில்தான் செயல்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பல முறை புகார்கள் அளிக்கப்பட்டும்  சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் கவலை அளிக்கும் செய்தியாக உள்ளது. 
 தொடர்ந்து துயரங்களை சந்தித்து வரும் பொதுமக்களுக்கு தற்போதைய ஆட்சியில் விடிவு பிறக்குமா  ?
செய்தி மக்கள் தொண்டன்

Post a Comment

0 Comments