தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

2வது நாளாக சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டம்..!


நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டும்,இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து இருந்தார் சவுக்கு சங்கர். இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம்சாட்டப்பட்ட சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கை நடத்துவதற்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை  யாருடைய குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நிரூபிக்க 6 வார கால அவகாசம் கேட்டிருந்தார்.  இந்த நிலையில்தான் அவர் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்காத நீதிமன்றம் அவசர அவசரமாக  சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர்.

சவுக்கு சங்கரை பார்ப்பதற்கு அதிகமான பார்வையாளர்கள் வருவதால் தடை ....

இதையடுத்து, அவர் மதுரை சிறையில் இருந்து கடந்த 16ம் தேதி, கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த அவரை, பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை கடந்த 24ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் சவுக்கு சங்கரை பார்க்க அதிக பார்வையாளர்கள் வருகின்றனர். அவருக்கு பொதுமக்கள் ஆதரவு அதிகமாக பெருகி வருவதாலும் சிறையில் எல்லா கைதிகளுக்கும் வழங்கப்படக் கூடிய பல்வேறு உரிமைகள் அவருக்கு திட்டமிட்டு முடக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து 

 பார்வையாளர்கள் சவுக்கு சங்கரை பார்க்க ஒரு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், தடையை நீக்க கோரியும் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.  அதிமுக ஆட்சியின்போது ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தொழில் பொதுத் தளங்களில் அதிமுகவை முயற்சித்து பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்து மக்களை திமுகவுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்தவர் சவுக்கு சங்கர்  அவருக்கான விசுவாசத்தை காட்டாவிட்டாலும்.  சாதாரன கைதிகளுக்கான உரிமையை கூட சவுக்கு சங்கருக்கு கொடுப்பதற்கு தமிழக சிறைத்துறை மறுப்பது அநீதியின் உச்சம் ....

Post a Comment

0 Comments