தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

பாலக்காடு பேருந்து விபத்து : 9 பேர் உயிரிழப்புக்கு ஓட்டுநரின் அலட்சியம்தான் காரணம் அசுர வேகத்தில் சென்ற அசுரா வாகனம்

கேரளாவின் வடக்கஞ்சேரி பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் அரசுப் பேருந்தும்- சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் உள்பட 42 பள்ளிக் குழந்தைகள் மற்றும் 5 ஆசிரியர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஊட்டிக்கு சென்றது. அப்போது வடக்கஞ்சேரியிலிருந்து வாலையாறு செல்லும்  தேசிய நெடுஞ்சாலையில் அந்த தனியார் பேருந்து அரசு பேருந்து உடன் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த கோர விபத்தில் 5 பள்ளிக் குழந்தைகள் உட்பட 9 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 24 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது..அதில் 10 பேரின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  காயம் அடைந்த அனைவரும் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் அசுரா என்று குறிப்பிடப்படும் அந்த சுற்றுலா பேருந்தை 97 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுனர் இயக்கி வந்தது விபத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது  ஓட்டுனர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஓட்டுநர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார் ...


அசுர வேகத்தில் சென்ற அசுரா

Post a Comment

0 Comments