தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தமிழகத்தில் என்ஐஎ அமைப்புக்கு காவல் நிலை அந்தஸ்து தமிழக அரசு அரசாணை ஆபத்தானது.

NIAக்கு காவல் நிலைய அந்தஸ்து வழங்கிய #திமுக அரசு!

கப் சிப் சமூக தலைவர்கள்!!

🔥எச்சரிக்கை🔥

சென்னை புரசைவாக்கத்தில்  NIA India அலுவலகத்துக்கு காவல்நிலையம் அந்தஸ்து வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தின் அபாயத்தை கருத்தில் கொள்ளாமல், இது போன்ற அனுமதி வழங்கியுள்ளதால்:  

1) தமிழ்நாட்டில் NIA நினைக்கும் வகையில் FIR பதிவு 
செய்யப்படும்.

2) விரைவில் NIA நிர்வாக எல்லை, தமிழ்நாடு முழுக்க விரியும் அபாயமும் உண்டு.

3) பாசிசபாஜகவின் மதவாத அரசியலுக்கு கைக்கூலியாக செயல்படும் NIA வின் அச்சுறுத்தலும் அராஜகங்களும் மேலும் மேலும் அதிகரிக்கும்.

4) எந்த வழக்கிலும் உள்ளே நுழைந்து தீவிரவாத முத்திரை குத்தி மாநில காவல்துறையின் அதிகாரத்தை பறித்தெடுக்கும் ஆபத்துள்ளது.

5) இது போன்ற அபாயகரமான செயல்கள் ஒரு சில மதங்களுக்கு எதிராக மட்டுமல்ல, எந்த ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படக் கூடிய அபாயமும் உண்டு.
பொதுவாக NIA என்பது தொடர்ந்து  ஒரு சமூகத்திற்கு எதிராக மட்டும் செயல்பட்டு கவனமான பொய் வழக்குகளை தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ஐஎ  என்பது ஜனநாயகத்தை இந்திய அரசியலமைப்பை படுகுழியில் தள்ள கூடிய செயலை செய்வதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது ....
அதைத்தான் சமீபகால செயல்பாடுகள் தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறது. 

Post a Comment

0 Comments