தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

திருத்தி அமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டம் சர்வாதிகார ஆட்சியின் உச்சம்.

தண்டனைகள் கடுமையாக்கப்படும் போது குற்றங்கள் குறையும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாக இருந்தாலும்.

வேலையின்மை பொருளாதார நெருக்கடி வறுமை இவைகளை கலைவதற்கான எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் ஆளும் ஆட்சியாளர்கள் செய்யவில்லை.  
ஒரு சாமானிய குடிமகன் நாள் முழுவதும் உழைக்கும் உழைப்பு என்னவென்பது எல்லோருக்கும் தெரியும் அவன் வைத்து இயக்கக்கூடிய வாகனமும் பழைய வாகனமாக இருக்கும் ஒரு சிறிய தொகையில் பழைய வாகனத்தை வாங்கி தன்னுடைய பயணத்தை அவன் தொடரும் பட்சத்தில் ....
எப்படிப்பட்ட ஆவணங்களை தெளிவாக வைத்திருந்தாலும் ஏதாவது ஒரு குறையை கூறி சும்மாவே பணம் பிடுங்கும் போக்கை நம்மால் பார்க்க முடிகிறது.  இந்த நிலையில் புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டம்  சாமானிய மக்கள் வாகனமே பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட. சர்வாதிகார சட்டத்தை தமிழகத்தில் திமுக அரசு நிலைநிறுத்த பார்க்கிறது.

நிச்சயம் இது மக்களால் 1% அளவுகூட ஏற்றுக்கொள்ளப்படாத சட்டமாகவே பார்க்கப்படுகிறது .

ரூபாய் அபராதம் கட்டிய மக்களை ஆயிரம் ரூபாய் கட்ட சொல்லுவதும்.

ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய இடத்தில் ஐயாயிரம் பத்தாயிரம் கட்டும் சொல்வதும் ..
சட்டமாக பார்க்க முடியவில்லை மாறாக வழிப்பறி கொள்ளையர்கள் நம்மை அடித்து பிடிங்கினால் என்ன மனநிலை வருமோ அதே நிலையில்தான்.

திருத்தி அமைக்கப்பட்ட இந்த சட்டம் சாமானிய மக்களுடைய வாழ்க்கையை அழிக்கும் சட்டமாகவே பார்க்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் சட்டத்தைப் பயன்படுத்தி சாமானிய மக்கள் வாகனம் ஓட்டுவது முழுவதும் நிறுத்தப்படலாம்  என்று எதிர்பார்க்க முடியும் ....

நாள் முழுவதும் ஒருவன் என்னதான் உழைத்தாலும்  500 ரூபாய் சம்பாதிப்பதே மிகப் பெரிய பாடாக இருக்கும் நிலை அநீதியான சட்டம் மக்களுக்கான நீதியை பெற்றுத்தர முடியாது.

அவர்களின் உழைப்பை உறிஞ்சி அவர்களின் வயித்தெரிச்சலில் சாபத்தில்
 நீதியை நிலைநாட்ட முடியாது ..

நமக்கு அவதாரம் போடும் சம்பந்தப்பட்ட காவலர்களே மோட்டார் வாகன சட்ட விதிப்படி வாகனங்கள் ஒட்டுவதில்லை ..
கண்டிப்பாக இந்த சட்டத்தின் மூலம்  ஏழை எளிய சாமானிய பாட்டாளி மக்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சட்டங்கள் என்பது குற்றங்களை தடுப்பதற்காக தற்போது திருத்தி அமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டம் சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது ...

நாம் மக்களிடம் எடுத்துக்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்த பதிவு  தமிழக அரசு மீது மக்கள் மிக மோசமான அதற்கு நிலையில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது ... 

Post a Comment

0 Comments