தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், "உயர் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது" என கூறியிருந்தார்.

இது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்ற விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "எங்கள் மீது விமர்சனங்களை வைக்க வேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை ஆனால் அதற்கென்று ஒரு வரைமுறை வேண்டும் என்று தான் சொல்கிறோம் எந்த ஆதாரங்களும் இல்லாமல் நீதித்துறை மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சவுக்குசங்கர் எப்படி வைத்தார்" என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த சிறைத் தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்வரை வழக்கு தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments