தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

மௌனிகளாக மாறிவிட்ட சமுதாய தலைவர்கள் பழிவாங்கப்படும் அப்பாவி முஸ்லிம்கள்

இந்தியாவில் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் பொய் வழக்குகளும்.  அப்பாவி இளைஞர்கள் மீது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  அதிலும் குறிப்பாக சமீப காலமாக புதுப்புது அரங்கேற்றங்கள் இந்தியாவில் அரங்கேறி வருகிறது.  ஏற்கனவே அச்சத்தாலும் பல்வேறு உரிமைகளை இழந்து வாழும் இந்திய முஸ்லிம்கள்  ஆளும் பாஜக அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதும்.  சாமானிய இந்திய குடிமகனுக்கான உரிமைகள்கூட கிடைக்காத வண்ணம் முஸ்லிம்களுக்கான உரிமைகளை பறிப்பதற்கான அனைத்து வேலைகளையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு மிகத் தெளிவாக செய்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் தொடர்ந்து வரும் வேலைய இழப்பு வறுமை பசி பஞ்சம் அதிகரித்து வரும் இந்த நிலையில் மக்களை திசை திருப்பிவருகின்றது. இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலும் சுரண்டப்பட்டு ஒரு சில தனிமனிதர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த நிலையில்.
 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக. மிகப்பெரிய சதி வேலைகளை பாஜக அரசு அரங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமெரிக்காவின் உளவு நிறுவனம் இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் நடப்பதற்கு முன் மிகப்பெரிய கலவரங்களை பாஜக அரசு ஏற்படுத்த திட்டம் தீட்டியுள்ளது என்ற தகவலை பல்வேறு சர்வதேச ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியிட்டிருந்தது.  
அதை மெய்ப்படுத்தும் வகையில் தொடர்ந்து சமீப காலமாக இந்திய முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் வகையில் தொடர்ந்து அவதூறுகளும் பொய் வழக்குகளும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பழிவாங்கும் செயல்களும் அரங்கேந்தி வருகிறது.  
வட மாநிலங்களில் அதிகரித்து வந்த இது போன்ற சம்பவங்கள் தற்போது தென் மாநிலங்களிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளுக்கு போலியான ஆதாரங்களை உருவாக்கி மாநில அரசின் உதவிகளோடு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வேலையை தொடர்ந்து மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.

இந்த நடவடிக்கைகளை கண்டும் காணாமல் தங்களுடைய சுய ஆதாயத்திற்காக அமைப்புகள் நடத்தும் சமுதாய அரசியல் அமைப்புகள் சிறுபான்மை நல வாரியங்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தாக்குதல்களை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதுதான் வேதனையான செய்தி ....

யாராக இருந்தாலும் அநியாயம் செய்யக்கூடிய எந்த மனிதனையும் இறைவன் நேசிப்பது இல்லை என்ற பொதுவான கருத்து தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம் ..

அநியாயமாக எந்த அப்பாவியையும் பழி வாங்குவது என்பது அந்த செயலைச் செய்யும் மனிதர்கள் நாளை இறைவனின் சாபத்தில் பிடிக்கப்படுவார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும் ..
இறைவன் தண்டனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன் ... அப்பாவி மக்களின் சாபத்தில் இருக்காதீர்கள் பொதுவான கருத்து மட்டுமே ....

Post a Comment

0 Comments