தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

சிறுபான்மை கல்வி உதவித் தொகையை நிறுத்தியது மத்திய அரசு கே பாலகிருஷ்ணன் கண்டனம்

இந்தியாவில் கல்வியை வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி கிடக்கும் சிறுபான்மை மக்களுக்கான கல்வி உதவித்தொகை கடந்த காலங்களில் மத்திய அரசு உதவியோடு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பாஜக பொறுப்பேற்ற பிறகு கடந்த 8 ஆண்டு காலத்தில் சிறுபான்மை மக்களுக்கான பல்வேறு சலுகைகளும் சிறுபான்மை நல வாரியங்களுக்கான பல்வேறு நிதி ஆதாரங்களும் முடக்கப்பட்டது..

சிறுபான்மை மக்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது மத்திய அரசு

தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான செய்திகளை எந்த ஒரு முக்கிய ஊடகங்களும் பெரிய அளவில் செய்தியாக வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துள்ள நிலையில்.  இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் பாஜகவின் கைப்பிடியில் சிக்கித் தவிப்பது ஜனநாயகத்தை மிகப்பெரிய மோசமான படுகுழியில் தள்ளிதற்கு சமமாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது அச்சுறுத்தப்பட்டு வரும் சிறுபான்மை மக்களுக்கான நீதி அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கல்வி வேலை My page. Felow please  பின்தங்கி கிடக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை பறிப்பதன் மூலம் சிறுபான்மையின் மக்களின் கல்வி வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிச பாஜக அரசு முயல்வது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே பாலகிருஷ்ணன் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார் .
இது தொடர்பாக சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளாக தங்களை காட்டிக் கொண்டு ஒன்று இரண்டு சீட்டுகளுக்கு இந்த சமூகத்தை அடகு வைத்த சமுதாய அமைப்புகள் தலைவர்கள் கூட இது சம்பந்தமான தங்களுடைய எதிர்ப்புகளை பெரிய அளவில் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments