தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தொண்டியில் முன்னாள் மாணவர்கள் முயற்சி அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி  இதன் சுற்று வட்டார பகுதிகளில்  செயல்பட்டு வரும் ஆரம்பம் மற்றும் நடுநிலை உயர்நிலை அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார அரசு பள்ளிகளின் வளர்ச்சி குழுமம் என்ற பெயரில் புதிய அமைப்பை துவக்கி உள்ளனர். துவங்கியுள்ளனர்.
இதில் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி அரசு பள்ளிகளையும் மேம்படுத்துவதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இந்த அமைப்பின் முதற்கட்ட பணியாக நிர்வாக தேர்வு செய்யப்பட்டது.

நிர்வாகிகள் தேர்வுக்கு பிறகு முதல் பணியாக தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறை பாதுகாப்பற்ற முறையில் மேற்கூரை இல்லை என்ற புகார் கூறப்பட்டது உடனடியாக அந்தப் பள்ளியின் மேற்கூரை அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு அதற்கான பணி உடனடியாக மூன்று தினங்களில் செய்து முடிக்கப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் பற்றாக்குறை பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்தக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அதன் அங்கத்தினர்கள் முடிவு செய்தனர்.  அதன் படி கல்வித்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பெருமக்களை பார்த்து பள்ளியின் அடிப்படை வசதிகளை அரசின் சார்பில் செய்து கொடுக்க கோரிக்கை வர வைக்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு ஆர்வம் உள்ள சமூக சிந்தனையாளர்களும் முன்னாள் மாணவர்களும்  இந்த அமைப்பின் இந்த முயற்சியை வெகுவாக 
 பாராட்டி வருகின்றனர்.பல்வேறு சகோதரர்களும் தாங்களாக முன்வந்து இந்த சேவை பணியில் தங்களையும் இணைத்துக் கொண்டு வருகின்றன ..
நன்றி ...
செய்திகள் By makkal thondan"""

Post a Comment

0 Comments