தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தொண்டியில் மகளிர் கலைக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க கோரி மத்திய சிறுபான்மை துறை ஆணையத்திடம் மனு

 தேசிய மனித உரிமை ஆணையத்தின் மாநிலத் தலைவரும்  கல்வி குழுமத்தின் ஒருங்கிணைப்பாளருமான. பாரிஸ் அவர்கள் தொண்டி பகுதியில் வளர்ச்சிக்காக தேசிய சிறுபான்மை ஆணைய அமைச்சகத்திடம் மனு அளித்தார் ....ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பகுதியாகும். இந்தப் பகுதிகளில்  சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் கல்வி வேலை வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
குறிப்பாக ஆரம்பக் கல்வியிலேயே இடைநீக்கம் செய்யப்பட்டு வேலை வாய்ப்புகளுக்காக பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்லும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  குறிப்பாக கல்வி வேலை வாய்ப்புகள் இந்தப் பகுதியில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற சூழலே தொடர்ந்து  நிலவுகிறது.  சுய தொழில் முனைவோருக்கு  மானிய கடன்களை கொடுத்து உதவி செய்யும் பல திட்டங்கள் இந்த மக்கள் மத்தியில் செயல்படுத்தப்படாமல் கிடக்கிறது.  அதற்கான வாய்ப்புகளும் இப்பகுதியில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்படவில்லை.
பெண் பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது.  உயர்கல்வி பெறுவதற்கு வசதி இல்லை இந்தப் பகுதியில் பெண் பிள்ளைகளின் உயர்கல்விக்கான வாய்ப்புகளும் திறக்கப்படவில்லை. அரசின் சார்பில் எங்கள் பகுதியில் பெண்கள் கலை கல்லூரி வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சமூகம் இதை கண்டுகொள்ளவில்லை
 மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையிலேயே இந்தப் பகுதியில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  

*எங்கள் பகுதிக்கு மருத்துவமனை கிடையாது அதிகமான விபத்துக்கள் மற்றும் பல்வேறு மோசமான நோய் பாதிப்புக்கு ஆளான மக்கள் முறையான சிகிச்சை கிடைக்காமல் பரிதாபத்துக்குரிய நிலையில் மரணிக்கிறார்கள்.
எனவே இந்தப் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றை உருவாக்க சமூகம் ஆவணம் செய்ய வேண்டும்.
மேற்படி கோரிக்கைகள் நிறைவேற்றுவதன் மூலம் இந்தப் பகுதியில் வாழும் சிறுபான்மை மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் பயன்பெறும் முன்னேறும் வாய்ப்புகள் உருவாக்கப்படும். எனவே சமூகம் மேற்படி கோரிக்கைகளை  எங்கள் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும்தேச நலன் கருதியும், அவசியமாக செய்து கொடுக்க வேண்டுகிறோம்...
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது ..

Post a Comment

0 Comments