தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

.தன் சுயநலனுக்காகதமிழக நலனை அடகு வைத்த அதிமுக

தமிழகத்தின் ஆளுநர் ஒரு ஆர்எஸ்எஸ் தீவிர ஊழியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே நாட்டின் ஜனாதிபதி மற்றும் ஆளுநர்கள் மக்களுக்கு பொதுவானவர்களாக இருக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் விதி ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநரின் நிலை முழுக்க முழுக்க இந்திய ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்பாடுகளை அதிகம் முன்வைக்கும் ஆளுநர்களாகவே உள்ளார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள தனிப்பட்ட உரிமைகளில் கை வைக்கும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பாஜக அரசு அதை செயல்படுத்துவதற்கு ஆளுநர்களை பயன்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தான் தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது..

ஆளுநர் அளித்த விருந்தில் அதிமுகவின் இரு அணிகளும் கலந்து கொண்டனர் ..தமிழ்நாடு என்ற சொல் பதத்தை மாற்றுவதற்கு ஆளுநர் கொடுத்த அற்ப  விருந்தை தின்றுவிட்டு தமிழக உரிமை அடகு வைத்த இந்த அடிமைகளுக்கு தமிழகத்தில் இடம் இருக்கலாமா  என்ற கேள்வியை தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் எழுப்பி உள்ளது.
இது வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருத்துக்கள் தெரிவிக்கிறது ....

Post a Comment

0 Comments