தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

போலிச் செய்தி வெளியிட்ட மனிஷ் காஷ்யப்பின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தமிழகம் அமைதியான மாநிலம் நீதிபதி கருத்து ..

தனது யூடியூப் சேனலில் போலிச் செய்திகளைப் பரப்பியதற்கு எதிராக பீகார் மற்றும் தமிழ்நாட்டில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட மூன்று எஃப்ஐஆர்களை இணைக்கக் கோரிய யூடியூபர் மனிஷ் காஷ்யப்பின் மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடிசெய்தது.  . தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காஷ்யப்பின் காவலை ரத்து செய்யக் கோரிய காஷ்யப்பின் மனுவை ஏற்க மறுத்த பெஞ்ச்,
தமிழகம் போன்ற அமைதியான மாநிலங்களில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க இது போன்ற செயல்களை ஏற்க முடியாது என்றும் சம்பந்தப்பட்ட நபர் தனக்கான  நிவாரணம் பெற உயர் நீதிமன்றத்தை நாடுமாறும் கூறி வலக்கை முடித்து வைத்தது . இது போன்ற தீர்ப்புகள் மக்கள் மத்தியில் நீதித்துறையின் மீது நன்மதிப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

உள்ளபடியே தமிழக மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் ...மததுவேச கருத்துக்களை விதைத்து வரும் நிலையில் தமிழக மக்கள் தங்களுடைய கலாச்சாரம் பண்பாட்டில் மத ஒற்றுமையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள் என்பதே தமிழக மக்களின் தனி அடையாளமாக உள்ளது ....இதுவே நமது மகத்தான ஒற்றுமைக்கான அடையாளம்  இதை நாம் தொடர்ந்து பேணுவோம் நமது தலைமுறைகளையும் அது போல் வளர்த்தெடுப்போம் ....

Post a Comment

0 Comments