தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

மோடி ஆட்சியில் முஸ்லிம்களின் கல்வி வேலை வாய்ப்பு திட்டமிட்டு பறிப்பு


இந்தியாவில் தொடர்ந்து பாஜக ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்களின் கல்வி வேலை வாய்ப்பு தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாஜக மற்றும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் கூட முஸ்லீம்களின் கல்வி வேலை வாய்ப்பு அரசு  பணிகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு முற்றிலும் துடைத்து எறியப்பட்டுள்ளது.
இது மோசமான அப்பட்டமான மனித உரிமை மீரல் மட்டுமல்ல ஒரு மத அடிப்படைவாத நாடுகளில்கூட. இந்த அளவு மோசமான வன்மத்தை ஒரு சமூகத்தின் மீது விதைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இந்தியாவில்  முஸ்லீம்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்படுவது மோடியின் பாஜக ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது மிகவும் கவலையான செய்தியாகும். இந்த மோசமான சர்வதேச மனித உரிமை மீறலை உலக நாடுகளும் கண்காணித்து வருகிறது.

இருப்பினும் உலக நாடுகள் இந்தியாவின் இது போன்ற செயல்களின் மூலம் தனிமைப்படுத்தும் சூழல் உருவாகிறது .. இவ்வளவு காலமாக ஜனநாயகத்தின் சக்தி வாய்ந்த தேசமாக திகழ்ந்து வந்த மதச்சார்பற்ற இந்திய தேசம் பெயர் மாற்றப்படும் சூழலும் உருவாகி வருகிறது.

மத அடிப்படையிலான மதவெறி அரசியல் கொண்ட எந்த நாடும் முழுமையான வளர்ச்சி பெற முடியாது என்பதற்கு பல்வேறு நாடுகள் உதாரணமாக உள்ளது.
அதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது இலங்கை  அதன் அடுத்த பட்டியலில் இந்திய தேசமும் இடம்பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே சர்வதேச அரசியல் விமர்சனம் பேசப்படுகிறது .. மோசமான குறுகிய மதவாத அடிப்படையிலான அரசியல் ஒரு தேசத்தை எந்த அளவுக்கு பின்னடைவு கொண்டு செல்லும் என்பதற்கு தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அரசு சிறந்த உதாரணம்
 .இந்தியாவில் இந்த ஆட்சி தொடர்ந்தால் மிக மோசமான பொருளாதார பின்னடைவை இந்தியா வருங்காலத்தில் சந்திக்கும் சர்வதேச நாடுகளும் குறிப்பாக. பல்வேறு வகையிலும் இந்தியாவோடு நெருக்கமாக உள்ள ஏராளமான உதவிகளை இந்தியாவிற்கு செய்து கொண்டிருக்கும் அரபு நாடுகள் முற்றிலும் இந்தியாவ  புறக்கணிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. ..

Post a Comment

0 Comments