தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

மோடியின் டுவிட்டர் ஆதரவாளர்களில். 70 சதவிகிதமும் போலிகள் !!!

 
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டுவிட்டர் (followers)ஆதரவாளர்கள் கணக்கில் உள்ளவர்களில் முக்கால் சதவீதத்தினரும் போலிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
’நெக்ஸ்ட் பிக் வாட்.கோம்’ என்ற இணைய தளம் நடத்திய ஆய்வில் மோடியின் ஆதராளவர்களில் எழுபது சதவிகித கணக்குகள் போலிகள் என்றும் போலியான முகவரிகளில் கணக்கு தொடங்கப்பட்டவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மோடி மாத்திரம் அல்ல சசி தரூர் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களின் டுவிட்டர் ஆதரவாளர்களில் பலரும் போலி முகவரிகளை கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 160 பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்வதில் சமூக வலைதளங்களான முகநூல்,டுவிட்டர் போன்றவை முக்கிய பங்கு வகிக்கும் என்ற செய்தி இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களை அரசியல் கட்சி தலைவர்கள் ஆதிக்கம் செலுத்த போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றனர்.


டுவிட்டரில் தற்போதைய நிலவரப்படி மோடிக்கு ஆங்கில கணக்கில் 20,04650 ஆதரவாளர்கள் (followers) பினதொடர்கிறார்கள்.இவற்றில் எழுபது சதவீதம் பேர்களும் போலிகள் என்றும் ஒரு முறை கூட டுவிட் செய்யாத 4.13 லட்சம் கணக்குகள் இன் ஆக்டிவ் கணக்குகளில் இருக்கிறார்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது.

கடந்த முறையும் மோடியின் ட்விட்டர் ஆதரவாளர்களில் முக்கால் சதவீதத்தினரும் போலிகள் என்றும்.பணம் கொடுத்து இணைய தளங்களில் நடைப்பெற்ற போட்டிகளில் ஓட்டுகளை சொந்தமாக்கினார்கள் என்றும் தேர்தலுக்கு முன்பு வந்த அறிக்கைகள் தெரிவித்து இருந்தன.

ஹிந்தி,மராத்தி,உருது,ஒரியா,பங்காலி,தமிழ்,மலையாளம்,
கன்னடம்,ஆகிய மொழிகளில் மோடியின் பெயரில் டுவிட்டர் கணக்குகள் உருவாக்கி ஆதரவாளர்களை அக் கணக்குகளில் சேர்க்கவும் கடுமையான பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது,இப்பணிகளை பிஜேபியின் ’ஐ.டி’ பிரிவு படு சாமர்த்தியாக செய்து வருகிறது என்றும் கூறப்படுகிறது

Post a Comment

0 Comments