தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

நாற்றம் எடுத்து வீசுகிறது தொண்டி பேரூராட்சி நிர்வாக || தலை விரித்தாலும் முறைகேடுகள்

வால்போஸ்டர்களால் பரபரப்பு

கடந்த அதிமுக ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்படாத பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வந்தநிர்வாகத்தில் கூட அதிகாரிகள் ஓரளவு நேர்மையாகவே செயல்பட்டு மக்கள் பணியை செய்து வந்த நிலையில்..
 தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் தேர்தலில் செலவழித்த முதலீட்டை  பன்மடங்கு லாபம் ஈட்டும் நோக்கோடு மட்டுமே செயல்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. அடிப்படை அத்தியாவசிய பணிகள் எதுவும் இங்கு பல்வேறு பின்தங்கிய பகுதிகளுக்கு இன்னும் கிடைக்காமல் இருக்கிறது.

 இந்நிலையில்தான் தொண்டி முழுவதும் தொண்டி பேரூராட்சியின் நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு விதமான வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.. குறிப்பாக 13 வது வார்டு தர்கா கால் மாட்டு தெரு முக்கிய சாலைகள் குன்றும்  குழியுமாக  சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் மிக மோசமான நிலையில் இருப்பதை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் தொடர்ந்து சரி செய்ய வலியுறுத்தி வந்தும் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில் அப்பகுதிமக்கள் பேரூராட்சி கண்டித்து வால்போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்..

 மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பலலட்சம் செலவில் கட்டப்பட்ட நவீன கழிப்பிடம் கடந்த மூன்றாண்டுகளுக்குமுன்  அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கட்டி முடிக்கப்பட்ட பேரூராட்சி நவீன கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படாமல் கிடப்பில் போடப்பட்டது....

 இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்களின் தொடர் அழுத்தத்தின் காரணமாக திறந்து வைக்கப்பட்ட நவீன கழிப்பிடம் போதிய பராமரிப்பு இல்லாமல் மீண்டும் மூடப்பட்டது.
 ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடந்து செல்லும் இசிஆர் கடற்கரைச் சாலை என்பது ஒரு முனையில் ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி செல்லும் தடமாகவும் மறுமுனை வேளாங்கண்ணி நாகப்பட்டினம் நாகூர்  இந்த பல்வேறு ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் முக்கிய இதயப் பகுதியாக தொண்டி அமைந்துள்ள நிலையில் இந்தப் பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் இங்கு இளைப்பாறும் காட்சிகளை பார்க்கமுடிகிறது. அப்பொழுது ஏராளமான பெண்கள் மட்டும் சுற்றுலா வந்த பொதுமக்கள் கழிப்பிட வசதிகள் இல்லாமல் தடுமாறும் காட்சியை மிகுந்த பரிதாபத்தோடு பார்க்க வேண்டிய அவலம் தொடர்கிறது.. இதனை கருத்தில் கொண்டு தான் மேற்படி கழிப்பிடம் கட்டுவதற்கு சமூக ஆர்வலர்  அகமது பாய்ஷ் அவர்கள்  கடந்த ஆட்சியில் செயல் அலுவலராக இருந்து திருமதி மாலதி அவர்களிடம் கோரிக்கை வைத்து. தொண்டியின் முக்கிய இதய பகுதிகளில்  நவீன கழிப்பிட வசதிகள் ( mobile toilet) பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு  பேரூராட்சி நிர்வாகம் இதை செய்து தர கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது திட்ட வரைவு அனுப்பப்பட்டு இந்த திட்டம்  பழைய காவல் நிலையம் அருகில் கொண்டுவருவதற்கு  நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர் வேளாணி மூலம் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாமல்  மிக மோசமான நிலையில் காணப்பட்டதை கண்டித்து பராமரிப்பிற்கு தனி நபர்களை நியமனம் செய்து கழிப்பிடத்தை  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
 ஆனால் தற்போதைய மக்கள் பிரதிநிதிகள்  மக்களைப் பற்றி கவலைப்பட தயாராக இல்லை விடியல் ஆட்சி என்கிறார்கள்  திராவிடம் மாடல் என்கிறார்கள்  அது என்னவென்று நமக்கு புரியவில்லை  பழைய திறந்தவெளி கழிப்பிடம் தான் திராவிட மாடலா என்று நமக்கு ஒன்றும் புலப்படவில்லை..
 அன்று காடு மேடுகள் இருந்தது மக்கள் ஒதுங்கினார்கள் குளம் குட்டைகள் இருந்தது தங்களை தூய்மைப்படுத்திக் கொண்டார்கள்...

 இன்று அப்படி ஒரு நிலையும் இல்லை அதற்கான வாய்ப்புகளும் கிடையாது. கடுமையான போக்குவரத்து நெரிசலும் மக்கள் பெருக்கமும் அதிகரித்துள்ள இந்த நிலையில் அத்தியாவசியம் நவீன கழிப்பிடம் என்ற நல்ல நோக்கத்தை கூட இவர்கள் புரிந்து கொள்ள தயார் இல்லை... மலம் ஜலம் என்பது கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளும் பொருள் அல்ல அது வந்தால் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளவும் முடியாது... சுயநலமாக சிந்திக்க கூடிய மனிதர்களுக்கு இது பத்தி கவலை இல்லை நம்மைப் போன்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டால் நம்மை குழப்பவாதி என்கிறாள்....

 மக்களுக்கு நன்மை செய்ய நினைப்பவனும் அந்த மக்களுடைய துன்பங்களை துயரங்களை கருத்தில் கொண்டு அதைப் போக்க செயல்படுபவன்  இது போன்ற  ஊழல் கறை படிந்த அரசியல்வாதிகளுக்கு குழப்பவாதிகள் ஆகத்தான் தெரியும் நிலையில்தான் இதைக் கண்டித்து வேதனையை வெளிப்படுத்தும் விதமாக தொண்டி  பேரூராட்சி நிர்வாகத்தின் மோசமான மக்கள் விரோத செயல்பாடு கண்டித்து  நூதனமான முறையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

 இதன் பிறகு கூட  இந்த கழிப்பிடத்தை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்குவிடும்  திட்டம் ஏதும் இல்லை. தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை விளம்பரம் செய்து வரும் இந்த நிலையில்  தொண்டி பேரூராட்சியின் இந்த செயல்பாடு  ஆளும் திமுக கட்சியினரை முகம் சிலிக்க வைத்துள்ளது. திமுக மேலிடம் இது சம்பந்தமாக உரிய தீர்க்கமான முடிவை எடுத்து  தொண்டி பேரூராட்சியின் நிர்வாக முறைகேடுகளை சரி செய்யுமா  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....

 நன்றி அன்புடன் மக்கள் தொண்டன் 

Post a Comment

0 Comments