தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

ஒபாமா, இந்திய சுற்றுப்பயண செலவை வெளியிட மத்திய அரசு மறுப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தார். அவருடன் அந்நாட்டு பாதுகாப்பு குழுவினரும் வந்தனர். அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் செலவிடப்பட்ட தொகையை தெரியப்படுத்துமாறு மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த் கல்கலி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார்.

ஆனால், ஒபாமாவின் இந்தியா பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட செலவுகளை வெளியிட மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது. இது உணர்வுப்பூர்வமான விஷயம் என்றும் இதுபோன்ற விவரங்களை தெரியப்படுத்துவதால் அயல்நாடுகள் உடனான இந்தியாவின் உறவு பாதிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரி ரோகித் ரத்தீஷ் தெரிவித்தார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த மனுதாரர் ஆனந்த் கல்கலி, ‘‘அரசில் வெளிப்படைத்தன்மையையும், பதிலளிக்கும் பொறுப்பையும் ஏற்படுத்துவதாக பா.ஜனதா உறுதியளித்து, ஆட்சியை பிடித்தது. அதன்படி அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

Post a Comment

0 Comments