தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தொண்டியில் தொடரும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

தொண்டி நம்புதாளை உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போடும் ஒரு கும்பலின் தொடர் அட்டகாசம் 

மேற்படி புகைப்படத்தில் பார்க்கும் இடமானது தொண்டி மணிமுத்தாறு  வண்ணாங்குளம்  உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலையிலுள்ள பகுதியாகும் இதை சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட நில அபகரிப்பு மோசடி கும்பல் பல்வேறு புறம்போக்கு இடங்களை பட்டா வாங்கி அதை விற்பனை செய்து வருகிறது.

அந்தக் கும்பலின் கைவண்ணத்தில் தற்போது இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆற்றை மணல் வைத்து தூற்றி பகிரங்கமாகவே ஆக்கிரமிப்பு செய்து தொடர் பணிகள் நடந்து வரும் நிலையில் ஒரு மிக முக்கியமான சாலையில் நடைபெறும் இந்த ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.  இதுவே சாமானிய ஏழை எளிய மக்கள் ஒரு சிறிய இடத்தில் வாழ்வதற்கு கொட்டகை போட்டால் கூட உடனே அரசு தன்னுடைய படை பட்டதோடு வந்து காலி செய்துவிடுகிறது.  ஆனால் ஆட்சியாளர்களை அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு 

இந்த குளக்கரைக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது ..

ஆக்கிரமிப்பில் உள்ள வண்ணாங்குளகரை வாயில் 

ஒரு நில மோசடி கும்பல் கூலிப்படைகளை கையில் வைத்துக்கொண்டு  தொடர்ந்து தொண்டி மற்றும் அதன் அருகில் உள்ள பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வாங்கியும் அதை விற்பனை செய்து பல கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இன்றைக்கு கொழுத்துதிரிகிறார்கள் . ஆனால் மிக தைரியமாக இது போன்ற செயலை அரசுத்துறை அதிகாரிகள் ஆதரவு இல்லாமல் செய்ய முடியாது என்பது நிதர்சன உண்மை.  வாழ்வதற்கு இடமில்லாத ஏழை எளிய மக்கள் பயன் அடைந்தால் கூட விட்டு விடலாம் ஆனால் தன்னுடைய வியாபாரத்திற்காகவும் இதை ஒரு பிழைப்பாகவும்வைத்து  இந்தக் குறிப்பிட்ட. நில மோசடி கும்பலை அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. 
சாதாரண மக்கள் தங்களுடைய சொந்த இடத்திற்கு பட்டா கேட்டால் அதற்கு மறுக்கக் கூடிய, தாமதிக்க கூடிய, அலைக்கழிக்ககூடிய. நிலையை பார்க்க முடிகிறது.  ஆனால் இதுபோன்ற மோசடி கும்பல் பகிரங்கமாக நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் இவர்களுக்கு பட்டா வழங்க கூடிய சூழ்நிலை தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது.  அரசு உடனடியாக இதை தடுத்து நிறுத்தாவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை .. 
 
நன்றி நமது செய்தியாளர் 

Post a Comment

0 Comments