தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

மீண்டும் வலுக்கும் எட்டுவழிச் சாலை விவகாரம்: கேலிக்கூத்தான திமுக-வின் நிலைப்பாடு| A-Z என்ன நடந்தது?

சேலம் எட்டுவழி பசுமைச்சாலை விவகாரத்தில் சாலை போடக் கூடாது என எந்தக் காலத்திலும் தி.மு.க சொல்லவே இல்லை' என முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோலப் பேசியிருக்கிறார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு. தொடர்ந்து அவர் பேசிவரும் கருத்துகள் அனைத்துத் தரப்பினரையும் கொதிப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் எ.வ.வேலு, ``இன்றைக்கு வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துவிட்டது. குடும்பத்துக்கு ஒரு கார் அல்ல... குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அத்தனை பேரும் கார் வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுவதில்லை. போக்குவரத்து வாகனங்கள் பெருகியிருப்பதால் சாலைகளில் நெருக்கடி ஏற்படுகிறது
இன்றைக்கு இருக்கும் வாகனப் பயன்பாட்டைப் பார்க்கும்போது சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண்டும்; வேறு வழியே இல்லை" எனப் போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தும்விதத்தில் பேசி சர்ச்சையில் சிக்கினார். அப்போதே இந்தப் பேச்சின் மூலம், சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைக்கான கிரீன் சிக்னலை அமைச்சர் மறைமுகமாகக் கொடுக்கிறாரோ என மக்கள் மத்தியில் சந்தேகம் கிளம்பியது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட்டால் நீர்நிலைகள் அழியும் என்கிறார்கள். சென்னைக்கு அருகே செங்கல்பட்டு, காஞ்சிபுரம்p மாவட்டங்களில் நீர்நிலைகள் இல்லாத இடமே இருக்க முடியாது. ஆனால், விமான நிலையம் வர வேண்டும் என்பது ஒரு பொதுநோக்கம். அது அமைந்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும், அதிக சரக்குகளைக் கையாளலாம்"
எ.வ.வேலு

என நீர்நிலைகள் அழிவைவிட பொதுநோக்கமே முக்கியம் என்ற தொனியில் பேசினார்.


இந்த நிலையில், ஆகஸ்ட் 26-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு,

தொடர்ந்து எட்டுவழிச் சாலை குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ``தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் எட்டுவழிச் சாலை குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் `தி.மு.க சாலை போடுவதற்கு எதிரி அல்ல. விவசாயிகளை அழைத்துப் பேசி, அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு பிரச்னையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள்' என்றுதான் சொன்னார். சட்டமன்றக் குறிப்பை வேண்டுமானால் எடுத்துக் காட்டுகிறேன்.

எட்டுவழிச் சாலை விவகாரத்தில் சாலை போடக் கூடாது என எந்தக் காலத்திலும் தி.மு.க சொல்லவே இல்லை
எ.வ.வேலு

இந்தப் பேச்சுகள் தான் தற்போது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறன. எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச் சாலைத் திட்டத்தை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்த தி.மு.க-வினர், தற்போது ஆட்சிக்கு வந்ததும் பேச்சை மாற்றி, ``நாங்கள் சொல்லவேயில்லை" என அப்பட்டமாகப் பொய் பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு நேர்மாறாக அமைச்சர் எ.வ.வேலு பேசுகிறார் என நான்கு பக்கங்ளிலும் தி.மு.க-வுக்கு எதிராக எதிர்ப்பலைகள் வீசுகின்றன.

உண்மையில் தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச் சாலை விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்தது... எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் என்னதான் பேசினார்... முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்... சற்று விரிவாக ஆராய்வோம்.

எட்டுவழிச் சாலைக்கு எதிராக, ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வெளிட்ட அறிக்கைகள்:

2018-ம் ஆண்டு காலகட்டத்தில் எட்டுவழிச் சாலை தொடர்பான விவகாரத்தில், ``விவசாயிகளுக்கு பாதிப்பிலாதபடி, மாற்றுப்பாதையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்" என்பதே அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டிலேயே எட்டுவழிச் சாலையை முழுவதுமாக எதிர்க்கும் நிலைப்பாட்டுக்கு தி.மு.க வந்ததை, அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் மூலமே புரிந்துகொள்ளலாம்.


Post a Comment

0 Comments