தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தமிழ்நாடு சமர்ச்சீர் கல்வி பாடபுத்தகத்தில் சாவர்க்கர் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய சுதந்திர வரலாற்றை தற்போது மாற்றி அமைக்கும் வேலையில் மத்தியில் ஆளும் மோடி அரசு மிகத் தைரியமாக செய்து வருகிறது..
குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தங்களுடைய பாடத்திட்டங்களை மத வெறுப்பு அரசியலுக்காக பயன்படுத்தும் பாடத்திட்டங்களை மாற்றி வரும் நிலையில்.
தமிழகத்திலும்  பாஜகவின் திட்டம் செயல்படுத்த திமுக அரசு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவே தெரிகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு கன்னட மொழி பாடப்புத்தகத்தில் ''அந்தமான் சிறைச்சாலையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டு இருந்த சிறிய அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால், அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது ஏறி அமரும் சாவர்க்கர் தினமும் தாய் மண்ணிற்கு வந்து செல்வார்.'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்திய வரலாற்றில் பொய்யையும் கற்பனை கதைகளையும்  தொடர்ந்து பரப்பி வரும் Rss சங்பரிவார் சக்திவேல் தற்போது இந்திய வரலாற்றில் யாராலும் மாற்ற முடியாத மறைக்க முடியாத பல்வேறு வரலாற்று உண்மைகளை சுதந்திர போராட்டத்திற்காக தியாகம் செய்த பல்வேறு சமூகங்களின் தியாகங்களை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து  அழித்து வருகிறது. 

1806 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான திப்பு சுல்தானின் மகன் பதே ஹைதர், வேலூரின் 23 வது படைப்பிரிவை சேர்ந்த இந்திய சிப்பாய்கள் செய்த வேலூர் கலகம் குறித்து அந்த பாடபுத்தகத்தின் 46 வது பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. அதில், '1806ல் நடந்த வேலூர் கலகத்தை 1857 ல் நடைபெற்ற 'முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னேடி' என வி.டி.சவார்க்கர் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.' என்று பச்சை பொய்யை பாடப்புத்தகங்களில் திணித்து வரக்கூடிய மறைமுக பணியை தமிழக பாடநூல் கழகம் பாஜக அரசின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறது .மதச்சார்பற்ற கருத்துள்ள பொதுவுடமைவாதிகள் ஆதரவைப் பெற்ற இந்த ஆட்சி அதற்கு எதிராக தொடர்ந்து மறைமுகமாக செயல்பட்டு வருகிறது என்பது சமீபகால தமிழக அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

Post a Comment

0 Comments