தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

1.75 லட்சம் கோடி மின் வாரியத்திற்கு இழப்புக்கு யார் காரணம் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கேள்விக் கணைகளால் துளைத்த திருமுருகன் காந்தி

தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும். அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய மின்நுகர்வோர் பொறுப்பேற்க வேண்டுமென்று மின் நுகர்வோருக்கான கருத்துக்கேட்பு கூட்டம் சென்னை உட்பட நான்கு நகரங்களில் நடைபெற்றது.

இதில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

மின் வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையை மேற்கோள்காட்டி 1.75 லட்சம் கோடி மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பை சரி செய்வதற்கு மின் நுகர்வோர் அதாவது மின்சாரத்தை பயன்படுத்தும் சாமானிய மக்கள் மீது கூடுதல் கட்டண சுமைகளை சுமத்துவதின் மூலம் இழப்பை சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது அது சம்பந்தமாக கருத்துக்கேட்பு கூட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் 4 நகரங்களை மட்டும் தேர்வு செய்தது ஏன்.

எத்தனையோ செய்தி மற்றும்  சமூக ஊடகங்கள் இருந்தும் இந்தத் தகவலை மக்கள் மத்தியில் அறிவிப்பு செய்யாதது ஏன்.

இருபது ஆண்டுகளுக்கு முன் லாபத்தில் இயங்கி வந்த மின்சார வாரியம் 1.75 லட்சம் கோடி நஷ்டத்தில் இயங்கி வர யார் காரணம்.

மின்வாரியத்திற்கு என்று கூடுதல் பொறுப்புள்ள தலைவர்கள் மற்றும் நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலையில் லாபத்தில் இயங்கி வந்த மின்வாரியம் இத்தனை லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.

அதிகாரிகள் நிர்வாகிகள் செய்த தவறுக்காக சாமானிய பொதுமக்கள் நீங்கள் செய்த ஊழலை சரிகட்ட வேண்டும் என்று மின் கட்டணத்தை உயர்த்துவது அதற்கு கருத்துக்கேட்பு என்று கண்துடைப்பு கூட்டங்களை நடத்துவதும் யாரை ஏமாற்றுவதற்காக....
 நீங்கள் தவறை செய்துவிட்டு   நஷ்டத்தை மக்கள் தலையில் சுமத்துவதற்கு நாங்கள் பொறுப்பேற்பதற்கு  சரியான காரணத்தை சொல்லுங்கள் என்று கடுமையாக கேள்விக் கணைகளால் துழைத்துள்ளார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி  ...

இதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய மின்வாரிய அதிகாரிகளுக்கு தனது கோரிக்கைகளை முன்வைத்து  மேற்படி குற்றம் நடப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது விசாரணை கமிஷன் வைத்து அதற்கான தண்டனையை தீர்வை கொடுத்தாக வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.  
திருமுருகன் காந்தியின் கருத்தானது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கருத்தாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே தமிழக அரசு மின் வாரிய ஊழலுக்கு காரணமான நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  எப்போதும் போல் வேடிக்கை பார்த்த போகிறார்களா அல்லது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை ஆட்சியாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
நன்றி 
 செய்தியாளர்
 மக்கள் தொண்டன் 


Post a Comment

0 Comments