தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

ஆதார் அட்டை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்

இந்திய குடிமக்களின் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையை நாம் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டியது அவசியம். இந்த நிலையில் ஆதார் ஆணையம் ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான விதிகளை மாற்ற முடிவு செய்துள்ளது. இது குறித்த விவரங்களை கீழ்கண்ட பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆதார் புதுப்பிப்பு:

இந்தியாவில் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் எண்ணை மத்திய ஆதார் அமைச்சகம் வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு குடிமகனின் அடையாளமாக விளங்குகிறது. இந்த ஆதார் அட்டை அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும், வங்கி பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படுகிறது. அதனால் பான் கார்டு, வங்கி கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றுடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அனைத்து பயன்பாடுகளுக்கும் உதவும் ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். அதாவது உங்களது ஆதாரில் உள்ள பெயர், மொபைல் எண், முகவரி போன்ற விவரங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதனை அப்டேட் செய்ய வேண்டும். ஆன்லைன் வாயிலாகவும்,

E சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதார் தொடர்பாக புதிய விதிமுறைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இனி 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யும் வகையில் விதிமுறைகளை மாற்ற ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறையில் இருந்து 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் தகவல் வந்துள்ளது. தற்போதைய சூழலில் ஆதார் அட்டை தாரர்கள் தாங்களாகவே முன் வந்து ஆதார் அட்டையை புதுப்பிப்பு செய்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது...

Post a Comment

0 Comments