தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

அதிமுகவிற்கு அடிக்குது லக்கி பிரைஸ் ||கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏமாற்றம் …

சாமானிய ஏழை எளிய மக்களை வேதனைப்படுத்திய தமிழக அரசு 
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்   ஏழை எளிய மக்களுக்குப் பயனளிக்கவில்லை.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏழை எளிய  சாமானிய மக்கள்  பெரிய அளவில் விலைவாசி ஏற்றத்தையோ அல்லது பல்வேறுவரிசுமைகளையோ சுமக்கவில்லை  மாறாக தமிழகத்தின் நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் பாசிச சக்திகளோடு கைகோர்த்தது மட்டுமே அதிமுக செய்த தவறாகும்.  கடுமையான மோசமான கொரோனா காலகட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு உதவி திட்டங்களை அதிமுக அரசு செய்தது.

ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் திருமண உதவித் திட்டம் மற்றும் முதியோருக்கான உதவி தொகை கிடைக்க செய்தது
 ,ஏழை மாணவர்களுக்கான சிறுபான்மை மக்களுக்கான கல்வி உதவித்தொகை,

 மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம், என பல்வேறு சலுகைகளை மருத்துவ மேம்பாட்டு வசதிகளை அதிமுக அரசு சாமானிய ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செய்து தந்தது.

அதுபோல் டாஸ்மார்க்  விற்பனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும் அதிமுக அரசு செய்தது,  மத்திய அரசு கொண்டுவரும் பல்வேறு தமிழக நலனுக்கு எதிரான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. அதில் குறிப்பிடத்தக்கது மீத்தேன்  போன்ற பல்வேறு திட்டங்கள்.

விளைநிலங்கள் நாசப்படுத்தப்படுவதும், எட்டு வழி சாலை திட்டத்தால் பெரும்பாலான விவசாயிகளின் உடமைகளை நாசப்படுத்தும் வேலையை அதிமுக அரசு செய்தது.  இதில் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது  மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை அதிமுக அரசு மீது ஏற்படுத்தியது.

இதனுடைய வெளிப்பாடாகத்தான் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்தது  இதை உரியமுறையில்  பயன்படுத்திக்கொண்ட திமுக அரசு பெரும்பான்மையோடு தமிழகத்தில் ஆட்சியை அமைத்தது.

ஆனால் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு வாக்களித்த மக்களுக்கு உள்ளதும் போச்சே  நொல்லகண்ணா கதையாக திமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டது.

அதில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒரு செய்திதான் எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சிறுபான்மை மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக இருந்துவந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைவாசிகளின் விடுதலை .
 இதைப் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக நான் ஆட்சிக்கு வந்தால் செய்து தருவேன் என்று வாக்களித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அது சம்பந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக அவர்களுடைய விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் உச்சநீதிமன்றம் வரைசென்று அவர்களின் விடுதலைக்கு தடை கோரி அபிடவிட் தாக்கல் செய்தது தமிழக அரசு இது சம்பந்தமாக அவர்களுடைய சிறுபான்மை பிரிவுகளாக இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் கூட அதிருப்தி தெரிவித்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளில் பொது மன்னிப்பு அடிப்படையில் ஆயில் சிறைவாசிகள் விடுவிக்கப்படுவது வழக்கம் அதிலேயும் தொடர்ந்து மதப் பாகுபாடு பார்த்து சிறுபான்மை மக்களை வஞ்சித்தது திமுக அரசு.சமீபத்தில் தொடர்ந்து ஐந்து முஸ்லிம் சிறைவாசிகள் உடல் நலக்குறைவால் சிறையிலேயே  இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியதா திமுக அரசு ...

இதற்குப் பதில் நிச்சயமாக இல்லை என்று ஒற்ற வார்த்தையில் கூறிவிடமுடியும் இருந்தாலும் இரண்டரை ஆண்டுகளை எட்டும் நிலையில் கூட ஒரே ஒரு திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்துவதற்கு கூட திமுக அரசுக்கு திறமை இல்லை என்று கூற முடியும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இது உண்மையான பயனாளிகளுக்கு ஏமாற்றம்.
திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன தெரியுமா 
1,சொந்த வீடு இல்லாதவர்கள் .
2,ஒரு நாளைக்கு 200 ரூபாய் கூட வருமானம் இல்லாத ஏழை மக்கள் 
3,வீட்டில் ஆண்களின் வருமானம் இல்லாத ஏழைகள்,
4,வாடகை வீடுக்கு கூட வாடகை  முடியாத அளவுக்கு வருமானம் இல்லாத எளிய மக்கள்.
5,கூலி தொழிலாளிகளின் குடும்பங்கள்.

 இப்படி இவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அது மிகையல்ல.
மேலும் இந்தத் திட்டம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது நீங்கள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று அரசு கூறி இருந்தாலும். தவறான தகவல்களை வருவாய் மற்றும் அரசு அலுவலர்கள் பதிவு செய்துள்ளது தான் வேதனை அளிக்கும் செயலாக உள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏழையலிய பாட்டாளி மக்களுக்கு  தொகை வராததற்கு ஒரு காரணத்தை குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அது என்ன செய்தி 
வருமான வரி செலுத்துவதாகவும்,  சிலர் ஓய்வூதியம் பெறுவதாகவும்,
பல்வேறு அரசு திட்டங்களில் பயன் பெற்று வருவதாகவும் பொய்யான தவறான தகவல்களை  அரசு தரப்பில் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளதுதான் அந்த மக்களை மேலும் வேதனைப்படுத்தி உள்ளது.

என் காதில் கேட்டதை மட்டும் தற்போது பதிவு செய்கிறேன் ...

நாசமா போயிடுவாங்க இந்த ஆட்சியாளர்கள் என்று சபிக்கக் கூடிய தாய்மார்களை என்னால் பார்க்க முடிந்தது ..

அரசு இவர்களுக்கானமேல் முறையீடு விண்ணப்பத்தை  இ சேவை மையங்களில் செய்து கொள்ளலாம் என்று ஒருபுறம் அறிவிப்பு செய்திருக்க அந்த ஈ சேவை மையங்களில் குறிப்பிடத்தக்க அந்த தரவுகள் செயல்படாமல் மக்கள் அலைமோதக்கூடிய அவல நிலையும் நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் அதிமுகவிற்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாகவே தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளிவந்திருப்பதும்.
திமுக மீது உள்ள வெறுப்பு அதிமுகவின் பக்கம்  மக்களின் ஆதரவை பெறுவதற்கான வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.  தாய்மார்களின் பெரும்பான்மையான ஆதரவை அதிமுக பெரும் என்று பொது பார்வையாளர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசி வருகிறார்கள் .
திமுக அரசு கொண்டுவந்துள்ள மின் கட்டண உயர்வு ஒன்றே போதும் மிகப்பெரிய பின்னடைவை திமுகவிற்கு ஏற்படுத்தும் என்கிறார்கள் பொது பார்வையாளர்கள். மேலும் தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பாஜக அரசோடு மறைமுக கூட்டணியில் திமுக இருக்கிறது என்ற பேச்சுக்களும் அரசியல் அரங்கில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

எது எப்படி இருந்தாலும் மக்களை இந்த அரசியல்வாதிகள் இலகுவாக ஏமாற்றி விடலாம் என்று கணக்கு போட்டு செயல்பட்டால் நிச்சயம் ஒரு நாள் மக்களால்  இவர்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதே நிதர்சன உண்மையாகும் ...

நன்றி 
அன்புடன் மக்கள் தொணடன்....


தொண்டிநியூஸ்  வீடியோ லிங்கைபெற 👇 நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து பயன்பெறுங்கள். @thondinews


Post a Comment

0 Comments