தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தொடர்ந்து திமுகவால் ஏமாற்றப்படும் சிறுபான்மை அரசியல் பிரதிநிதித்துவம்||

காங்கிரசிற்கு பத்து இடம் தமிழகத்தில் தற்போதைய புள்ளிவிபரப்படி ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கையில்  சுமார் 18 சதவீத வாக்குகளை  முஸ்லிம் சமூகம் தமிழகத்தில் கொண்டுள்ளது.
 ஆளுங்கட்ச்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும்  யார் ஆட்சியில் அமரவேண்டும் என்று பெரும்பான்மை பலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்களின் ஓட்டு வாங்கியுள்ளது.

 திமுகவால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் முஸ்லிம் சமூகம்...
 ஆனால் தொடர்ந்து எங்களின் ஓட்டு வாங்கி ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு சாதகமாகஆக்கிக் கொண்ட நிலையில்  திமுகவின் நரி தந்திரம் இந்த முறை முஸ்லிம்களிடம் எடுபடுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

 பாஜக வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டி  ஒரு சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளது திமுக.

 இந்நிலையில் தொகுதி பங்கீடுகள் நிறைவு பெறும் பட்சத்தில் உள்ளது. இதில்

 திமுக 22 இடங்களில் நிற்கும் என்று கூறப்படுகிறது. காங்கிரசுக்கு 10இடம் உட்பட  இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கு தலா இரண்டு இடமும்  விசிக இரண்டு இடமும் தங்களின் அரசியல் அடிமையாக இருக்கக்கூடிய முஸ்லிம் லீக்ற்கு ஒரு இடமும்  என்று முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை  ஒத்தைச் சீட்டின் அடிமைகளாக நிறுத்தி இருக்கிறது திமுக தன்னுடைய கூட்டணியில் கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்து வரும் மற்றும் ஒரு முஸ்லிம் அரசியல் அமைப்புக்கு  குறிப்பிட்ட விஐபிகளுக்கு பொருளாதாரம் மட்டும் போதுமானதாக இருப்பதால் அதைப் பெற்றுக் கொண்டு ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும்

  குமாரு பாஜகவை வீழ்த்துவதற்காக  உயிரைக் கொடுத்து போராடனும் குமாரு என்று  திமுக தலைமை அந்த அமைப்பை தட்டிக் கொடுத்ததாகவும்.கூறப்படுகிறது.
 இப்படி ஒரு பரிதாபமான சூழலில் தமிழகத்தில் முஸ்லிம்களின் அரசியல்   பிரதிநிதித்துவம்  பூஜ்ஜியமாகி உள்ளது.
 நீங்கள் என்றும் திமுகவின் அடிமையில்தானே இவர்களை எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்வார்கள் என்ற போக்கே தமிழகத்தில் திமுகவின் அணுகுமுறை தெளிவு படுத்துகிறது...

 முஸ்லிம் சமூகத்தில் அரசியல் ரீதியாக ஒருங்கிணைப்பு இருந்திருந்தால் இதுபோன்ற அவமானங்களை தவிர்த்து இருக்கலாம்  தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் சுயநலத்திற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை  எதிர்காலத்தை நாசமாக்கி விட்டார்கள் இஸ்லாமிய அரசியல் அமைப்புகள்.. காலமும் நேரமும் இருக்கிறது இனியாவது விழித்துக் கொள்ளுமா சமூகம்...

 நன்றி:
 அன்புடன் மக்கள் தொண்டர்

Post a Comment

0 Comments