தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை கருத்துரிமையை பறித்ததா நீதிமன்றம்


தற்போது நீதித்துறையின் அவலநிலை தொடர்ந்து மக்களால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலை ஒரு குறிப்பிட்ட ஆளும் ஆதிக்க வர்க்கத்திற்கு .சாதகமாக  நீதித்துறையில் சிலர் தவறு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு  பொதுவாக அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.  நீதி என்பது இருப்பவன் இல்லாதவன் என்று பாரபட்சம் பார்க்கிறது.

அதுபோல் ஆட்சி அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டும். தொடர்ந்து மத அடிப்படையிலான தீர்ப்புகளில் 
சிறுபான்மை மக்களுக்கு எதிராக. நீதித்துறையை செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டும்.  
பல்வேறு அமைப்புகளால் பேசப்பட்டும் அதை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டும் வரும் நிலையில்.

மக்களுடைய உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் சவுக்கு சங்கரின் தைரியமான வெளிப்படையான பேட்டி ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில்தான்  நீதிபதி  தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சவுக்கு சங்கருக்கு எதிராக பின்னப்பட்டது..
இந்த மிக விரைவாக விசாரித்த நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு அவருடைய நியாயமான வாதத்தை  அரசியல் சாசனம் வழங்கிய சட்ட உரிமையை வழங்க மறுத்து விட்டது என்று சவுக்கு சங்கர் தரப்பில்  கூறப்படுகிறது  இந்நிலையில்தான் அவசரஅவசரமாக ஒரு வார காலத்திற்குள் 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்திருக்கிறது..

இந்த வழக்கில் ஏற்கெனவே சவுக்கு சங்கர் ஆஜரான நிலையில், இன்றும் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அளித்தபோது, "இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்புக்கு உட்பட்டதல்ல. ஆகவே இந்த வழக்கை மதுரைக்கிளை விசாரித்த இயலாது. நீதித்துறையில் இடஒதுக்கீடு என்பது முறையாகப் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக பல நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அமைப்புகள் அளித்த தரவுகளைக் குறிப்பிட்டே கருத்தை பதிவு செய்திருக்கிறேன். என்னுடைய கருத்துகளை தனியே பார்க்கும்போது பிரச்னையை ஏற்படுத்துவதாக தோன்றலாம். ஆனால், அதன் பின்புலத்தை பார்த்தால் உண்மை விளங்கும்.

நீதித்துறையின் மதிப்பை குறைப்பதோ, களங்கப்படுத்துவதோ என் நோக்கமல்ல. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு" எனத் தெரிவித்தார் சவுக்கு சங்கர்.

இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்க சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின் மூலம் இந்தியாவின் குடிமக்கள் தன்னுடைய பேச்சுரிமை கருத்துரிமை சட்டம் விளக்கப்பட்டது என்று எடுத்துக் கொள்ள முடிகிறது.

மன்னராட்சி அமலில் உள்ள பல்வேறு நாடுகளில் கூட மன்னரின் உத்தரவுக்கு மாற்றுக் கருத்து கூறும் நபர்களின் கருத்தைக் கேட்க கூடிய சூழ்நிலைகள் உள்ளது ஆனால் மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில்  என்ன நடக்கிறது என்பது வேதனையே ....

Post a Comment

0 Comments