தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

பெண்கள் இலவச பேருந்து சேவையை பயன்படுத்துவதில் அரசு பேருந்து நடத்துனர்களால் அவமானப்படுத்தப்படும் பெண்கள்

ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர்கள் சுரேஷ்குமார் - கௌசல்யா தம்பதியினர் தனியார் குடும்பத்தினருடன் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கோயிலுக்குச் செல்ல சாஸ்திரி நகரில் இருந்து அரசு பேருந்தில் ஏறியுள்ளனர்.

இந்நிலையில், பேருந்தின் முன் இருக்கையில் இடம் இல்லாததால் பின் இருக்கையில் தனது கைக்குழந்தையுடன் அமர்ந்துள்ளனர். அப்போது பேருந்து நடத்துனர் செந்தில்குமார் என்பவர் ஆண்கள் இருக்கையில் அமரக்கூடாது என கூறியதாகவும் குழந்தையுடன் நிற்க முடியவில்லை எனக் கூறியதற்கு 'இலவச பயணச்சீட்டில் வரும் நீங்கள் அடுத்த பேருந்தில் செல்லுங்கள்' என தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தம்பதியினரை அனுப்பியுள்ளனர். அங்கு புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையை தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தம்பதியினர் மீண்டும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காத்திருந்து வருகின்றனர்.

மேலும் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்திய நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களை அவமானப்படுத்துவது தமிழக அரசு ...

தவறு செய்யும் அரசு ஊழியர்கள் விஷயத்தில் தொடர்ந்து அலட்சியமாக திமுக அரசு செயல்படுகிறது என்பது திமுக அரசு பொறுப்பேற்ற காலத்தில் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் நிகழ்வாக மாறிவிட்டது.

மக்களை அவமானப்படுத்தும் விதமாக திமுக அரசின் செயல்பாடு உள்ளது ...

பாதிக்கப்படும் அப்பாவிப் பொதுமக்கள் புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்பது தமிழக காவல்துறையின் மோசமான மெத்தனப் போக்கையே காட்டுகிறது. 

Post a Comment

0 Comments