தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

ஹிஜாப் வழக்கில் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகக் கருத்து கூறி வரும் நீதிபதிகள் ..

ஒருகாலம் இருந்தது இந்தியாவின் நீதித்துறை மீது  மக்களுக்கு மிகப் பெரிய மரியாதையும் கண்ணியமும் நம்பிக்கையும் மிதந்து வந்தது  மத ஒற்றுமைக்கும் சமூகநீதிக்கும் பெயர் போல நம்முடைய தேசத்தில் பல்வேறு இன மக்கள் அவர்களுடைய கலாச்சார உரிமைகளை பின்பற்றி வாழ முடிந்தது.

தற்போது இந்தியாவின் நிலையோ அப்படி மாற்றமாக ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை தவிர மற்ற மக்களுடைய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு நிலை நீதி வழங்கும் நீதித்துறையும் அவர்களுடைய கைப்பிடியில் சிக்கித் தவிக்கிறது.

குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நீதித்துறை மிக மோசமாக மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்க கூடிய சூழல்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது.  அரசியல் சாசனம் நீதித்துறையின் சட்டப் புத்தகங்கள் பேசப்படுகிறதோ இல்லையோ ....

ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் பாசிச சித்தாந்தங்கள் பேசப்படுகிறது. அதனடிப்படையில் தீர்ப்புகளும் வழங்கப்படுகிறது பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு,  பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் போன்ற வழக்குகள் அதன் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது.

ஆட்சியாளர்கள் தான் காவி பயங்கரவாதிகள் என்றால் அவர்களை சீர்படுத்த வேண்டிய கண்காணிக்க வேண்டிய நீதிமன்றங்களும் அதனடிப்படையிலேயே செல்கிறது. 

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு PU கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர்.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் சீருடையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்தது. அப்போது நீதிபதி ஹேமந்த் குப்தா, 'மற்றவர்கள் பள்ளியில் சீருடை அணிந்திருக்கும்போது, தலையில் முக்காடு அணிகிறார்கள்.' என்று கூறினார். அப்போது வழக்கறிஞர் காமத், தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்லும்போது சந்தியா வந்தனம், பூணூல், ருத்ராக்‌ஷ போன்றவற்றை அணிவதாக தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதி ஹேமந்த் குப்தா, 'பூணூல் என்பது சட்டைக்கு உள்ளே இருக்கிறது. யாரும் நமது சட்டையை கழற்றி உள்ளே இருப்பதை பார்க்க மாட்டார்கள். பூணூல் அணிவது பள்ளியின் ஒழுக்கத்தை மீறும் செயலாகாது. மதசார்பின்மை என்ற வார்த்தை உண்மையான அரசியலமைப்பில் இடம்பெறவில்லை.' என்றார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை காலை 11:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



Post a Comment

0 Comments