தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

முஸ்லிம்களை அச்சுறுத்தும் பாஜக அரசு ஆர் எஸ் எஸ்ஸின் கைத்தடியாக செயல்படும் அரசு எந்திரம் ...

இந்தியாவில் தொடரும் தொடரும் வெருப்பு அரசியலால். நாட்டின் பல்வேறு உண்மை வரலாறுகள் மாற்றி அமைக்கப்பட்டு அது பாடத்திட்டங்களாக பரப்புரை செய்யப்படுகிறது. 
 இதை பாஜக அல்லாத பிற மாநிலங்கள் மாணவர்கள் மத்தியில் மறைமுகமாகவும் பகிரங்கமாகவும்  புகுதி வருகிறது .தமிழகமமும் அதில் விதிவிலக்கல்ல.
 இந்நிலையில்தான் இதற்கு எதிராக தொடர்ந்து வெறுப்பு அரசியலுக்கு எதிராக தன்னுடைய கருத்துக்களை முன்வைத்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் பல்வேறு பொதுவுடைமை அமைப்புகள் மோடி அரசின் இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்தும் அதற்கு எதிரான பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கும் வருகிறது.
நாட்டின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முடங்கி உள்ள நிலையில் இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமான அதளபாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது.
வரும் காலங்களில் அண்டை நாடான இலங்கையைவிட மோசமான நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கோரி வரும் நிலையில்  மோடி அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரே குறிக்கோளாக இருக்கக்கூடிய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரான தன்னுடைய மறைமுக யுத்தத்தை பகிரங்கமாக செய்யத் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாகத்தான் சமீப நாட்களாக SDPI PFI அமைப்புகளையும் அடக்குவதற்காக தன்னுடைய RSS ள் செயல்திட்டத்தை மத்திய அமலாக்கத்துறை மற்றும் NIA மூலமாக செயல்படுத்த துவங்கியுள்ளது.  நாட்டில் முஸ்லிம்கள் ஏற்கனவே அமைதி இழந்து வாழ்ந்து வரும் நிலையில் CAA, NRC, NPR போன்ற சட்டங்களை அமல்படுத்துவது மூலம் முஸ்லிம்களை மேலும்  உரிமை இழந்த மக்களாக சிறையில் அடைத்து விடலாம் என்று எண்ணக்கூடிய சூழலில்  இதற்கு எதிராகப் போராடக்கூடிய முக்கிய அமைப்புகளை குறிவைத்து தற்போது NIA CBI போன்ற துறைகளை மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகள் என்ற பெயரில் PFI SDPI நிர்வாகிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு UAPA கொடும் சட்டத்தில் சிறையில் அடைக்க பட்டதாக கூறப்படுகிறது 

யு ஏ பி ஏ என்ற அந்த சட்டம்  மூலம் பிணை கிடைக்காமல் தொடர்ந்து அவர்களை சிறையில் அடைப்பதன் மூலம் முஸ்லீம் அமைப்புகளை அச்சுறுத்தி விடலாமென்று  மோடி அரசு எண்ணுகிறது.
இதன் காரணமாக நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி நாட்டில் மேலும் போராட்டங்களை வலுப்படுத்த மோடி அரசு சிறுபான்மை மக்களை உசுப்பேற்றி விடுகிறது என்ரே கூறமுடியும்.
PFI SDPI மீதான நடவடிக்கைகளுக்கு கைதுகளுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓரணியில் திரண்டு பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுபான்மை சமூகம் இது போன்ற கால கட்டங்களில் ஒன்றுபடவிட்டால் இந்தியாவில் சிறுபான்மை சமூகம் ஒட்டுமொத்தமாக துடைத்தெறியபடும் என்பதில்  மாற்றுக்கருத்தில்லை ...
தற்போது சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் ஜனநாயக ரீதியான சட்ட ரீதியான போராட்டம் ஒன்றே தீர்வாக அமையும் ....


Post a Comment

0 Comments