தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

SDPI PFI அமைப்புகள் மீது மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்திக் கொள்ளட்டும் பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்


தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சிறுபான்மை மக்களின் பேரியக்கமாக கருதப்படும் PFI SDPI அமைப்புகளை முடக்குவதற்காக திட்டமிட்டு மத்தியில் ஆளும் பாஜக அரசு NIA வை பயன்படுத்தி பல்வேறு அடக்குமுறை செயல்களை முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாக. SDPI PFI நிர்வாகிகள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமுமுக மற்றும் மமக தலைவர் MH ஜவாஹிருல்லா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் .

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள்  நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)  மற்றும் அமலாக்க துறை ஒன்றிய அரசின் காவல் படைகள் புடைசூழ நடத்திய சோதனைகளும் செய்துள்ள கைதுகளும் வன்மையான கண்டனத்திற்குரியவை. 

ஒன்றிய அரசின் சிறுபான்மை வெறுப்புணர்வின் பிரதிபலிப்பாகவே இந்த தீய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பின்னிரவில் செய்யப்பட்டுள்ள இந்த அத்துமீறிய செயலை எவ்வகையிலும் நியாயாப்படுத்த முடியாது. குறிப்பாக மதுரையில் ஒரு பெண் நிர்வாகியின் இல்லத்திற்கு சென்று அத்துமீறலில் ஈடுபட்ட ஒன்றிய அரசின் ஏவலாளிகளின் நடவடிக்கைகள் உச்ச பட்ச மனித உரிமை மீறலாகும்.
ஒன்றிய அரசு என்ஐஏ போன்ற தன்னாட்சி அமைப்புகளை தனது அரசியல் லாபத்திற்காகவும் பழிவாங்குவதற்காகவும் பயன்படுத்தி வருவதன் மற்றொரு எடுத்துகாட்டாக இன்றைய சோதனைகள் அமைந்துள்ளன. 

மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் என்ஐஏ கலைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை இன்றைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன.

ஒன்றிய பா.ஜ.க அரசு சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் போக்கை கைவிட்டு  கைது செய்யப்பட்ட PFI  SDPI நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments