தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தமிழகத்தில் பாஜகவை புறக்கணித்தால் அதிமுக அமோக வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது ...

தற்போதைய விடியல் ஆட்சியில் மது ஒழிப்பு, மின் கட்டணம் சீர்படுத்துதல், வரி உயர்வு, பல்வேறு அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றம், தனியார் துறைகளின் கல்வி கட்டண கொள்ளை, பெரும் முதலாளிகளுக்கு அரசு புறம்போக்கு நிலங்கள் தாரை வார்ப்பு,, கார்ப்பரேட்டுகளின் சுயலாபத்திற்காக பூர்வீக குடிமக்களை அகதிகளைப் போல் அப்புறப்படுத்துதல், தொடர்ந்து அப்பாவி மக்கள் மீது காவல்துறையின் அத்துமீறல்கள், எண்ணற்ற பொய் வழக்குகள், பாதிக்கப்படும் மக்கள் மீதே பொய் வழக்கு இப்படி பல்வேறு மோசமான நிர்வாகத் திறமையற்ற ஆட்சி தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.  ஒவ்வொரு நாளும் பல்வேறு தரப்பு மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார். 
இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு மிகப்பெரிய நீண்ட மக்கள் விரோத செயல்பாட்டு பட்டியலை இந்த ஆட்சியின் மீது மக்கள் மிகப்பெரிய  அதிருப்தியில் இருக்கிறார்கள் .
இப்படி ஒரு சூழலில் சில இலவசங்களை கொடுப்பதாக வாக்கு கொடுத்த வாக்குகளும் பொய்ப்பித்து போயின .....
கடந்த அதிமுகவின் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மைகள்கூட. தற்போதைய திமுக ஆட்சியில் துளி அளவு கூட மக்களுக்கு நலப் பணிகள் சென்றடையவில்லை என்ற கோபமும் விரக்தியும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது ..
⚡மின் கட்டணத்தை மாத மாதம் மாதம் கட்டும்முறை நடைமுறைப்படுத்தப்படும்.

🍺🍸பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

🏪கல்வி வேலைவாய்ப்பில் ஏழை மக்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் என்ற வாக்குகள் எல்லாம் பொய்ப்பித்துப் போயின ...
மாறாக மத்தியில் ஆளும் பாஜகவின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழகத்தில் அமல்படுத்தும் வேலையை தற்போதைய விடியல் அரசு செய்து கொண்டிருக்கிறது.
ஆயுள் தண்டனை கைதிகள் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்தநாளில் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படுவார்கள்.
ஆனால் அதிலும் கூட பாஜக அரசு ஆட்சியில் இருந்தால் என்ன செய்யுமோ அந்த வேலையை தற்போதைய திமுக அரசு செய்திருக்கிறது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு 
25 ஆண்டுகளுக்கு மேலாக. சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் கருணை அடிப்படையில் தங்களுடைய குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், மிக மோசமான நோயற்ற நிலையில் ஏராளமான கைதிகள் கொடும்  சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை அண்ணா பிறந்தநாள் எல்லா கைதிகளுக்கும் கொடுக்கப்படும் சலுகை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில். எங்களோடு இருக்கக்கூடிய சிறுபான்மை பிரிவுகள்தொடர்ந்து வலியுறுத்தியும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்ற அளவிற்கு விடுதலையாவதில்  மிகப்பெரிய ஒரு சிக்கலை வேண்டுமென்றே  ஏற்படுத்தி இருக்கிறது திமுக அரசு ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகு சிறைவாசிகள் விடுதலை  ,முதல்வரின் தனி அதிகாரத்திற்குட்பட்ட சிறைவாசிகள் விடுதலையை வேறு மாதிரியாக திசை திருப்பி இருக்கிறது திமுக அரசு.   இது மிக மோசமான நடவடிக்கை.

பொதுவாக பாஜக பற்றி விமர்சனம் செய்யும் நாம் அவர்கள் மதவாத அரசியலை முன்னெடுப்பதும் ..மக்களுக்கான எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களையும் செய்யாமல் மாறாக கார்ப்பரேட்டுகளுக்கு மக்களுடைய வரிப்பணத்தை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து கொடுக்கக்கூடிய வேலையை ஒரு மத்திய அரசு இடைத்தரகரை போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற மோசமான விமர்சனத்தை பொதுமக்கள் வைக்கும் நிலையில் ...

தமிழகத்தில் மதவாதத்திற்கு எதிரான ஒரு ஆட்சியை ஸ்டாலின் தலைமையிலான அரசு தரும் என்று மக்கள் வைத்த நம்பிக்கை தற்போது வீணாகிப் போய்விட்டது.

இந்நிலையில் மாற்று அணியாக பல அரசியலமைப்புகள் இருந்தாலும் மக்கள் வெகுவாக நம்பக்கூடிய  எடப்பாடி தலைமையிலான அ தி மு க மோடிக்கு கொடி பிடிப்பதை விட்டுவிட்டு முறையான எதிர்க்கிச்சியாக சரியாக செயல்பட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கை ஓங்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பாஜகவோடு  அதிமுக பயணித்தால் நிச்சயம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழக மக்கள் அமைதியாக வாழ விரும்புகிறார்கள் மதவாதத்திற்கு தமிழகத்தில் இடமில்லை என்று தமிழக மக்கள் தொடர்ந்து நிரூபித்துக் காட்டி வரும் நிலையில் எவ்வளவு பெரிய அரசியல் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் மத அரசியலை முன்னெடுக்கும் எந்த அரசியல் கட்சியையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.  அவர்களோடு இணைந்து பயணிக்கும் அதிமுக, திமுக போன்ற அமைப்புகளை முற்றிலும் புறக்கணிப்பார்கள் எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் பாஜக உடனே உறவை துண்டித்தால்  திமுக அரசு மீது இருக்கும் மக்களின் கோபம், மக்கள் விரோத மோடி அரசின் மோசமான பாசிச கொள்கைக்கு எதிராக அதிமுகவை பொதுமக்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த வாய்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடி தலைமையிலான அரசு புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

 By"நன்றி அன்புடன் மக்கள் தொண்டன்.. 

Post a Comment

0 Comments