தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் UAPA ல் கைது

உத்தரபிரதேசத்தில் பல்வேறு இடங்களில் ATS சோதனை நடத்தி, PFI உடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 
The Hindu news 
 மே 07, 2023 06:14 pm |  
பாஜக மற்றும் பாஜக பிடியில்  இல்லாத மாநிலங்களில்  சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் கொண்டுவரப்பட்டு பிரத்தியேகமாக UAPA முஸ்லிம் இளைஞர்கள்கைது செய்யப்பட்டு வருகின்றன.
 தொடர்ந்து இந்த சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் NIA குறிப்பிட்ட ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயல்பட அறிவுறுத்தி உள்ளதாகவே தெரிகிறது ..
இதுவரை சட்டவிரோத ஆயுதங்களை பகிரங்கமாக வைத்து செயல்படக்கூடிய பல்வேறு கலவரங்களை கொலை கொள்ளைகளை நடத்தி வரும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒரு சங்பரிவார் பயங்கரவாதிகளை கூட இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்ட வந்த PFI பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு  பல்வேறு சமூக சேவைகளை கல்வி மருத்துவம் பேரிடர் ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி வந்திருக்கிறது.  அப்படிப்பட்ட ஒரு அமைப்பில்  தனிமனிதர்கள் ஒரு சில தவறுகளை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும் சாமானிய சாதாரண சட்டத்தின் கீழ் எல்லா இந்திய குடிமக்களுக்கும் கொடுக்கப்படும் நீதிகளின் அடிப்படையில் அவர்கள் தண்டிக்கப்படவில்லை மாறாக ஒட்டுமொத்த அமைப்பையே தடை செய்து அதில் பயணித்த பல்வேறு அப்பாவி இளைஞர்களை கொடுங்கோல் சட்டத்தின் கீழ் தொடர்ந்து கைது செய்து வருகிறது.NIA.
பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பாசிச பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும் கொடுக்கப்படும் சமூகங்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடப்படும் செயல்பாடுகளை தொடர்ந்து என்னையே செய்து கொண்டிருக்கிறது.
இது மனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்ல மனசாட்சியுள்ள மனிதநேயம் உள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளமுடியாத மோசமான செயலாகும் உண்மையான தேச நலன் காக்கக்கூடிய பாதுகாப்பு அமைப்புகள் மத பாகுபாடு பார்ப்பது தேச ஒற்றுமையை நாசமாக்கி விடும் செயலாகும்.
ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால் சட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்கக்கூடிய. பாதுகாப்புத்துறை என்பது மனசாட்சியோடு நீதியோடு நடந்து கொள்வது தான் இந்த தேசத்தை அமைதி பெற வைக்கும் நீதியை நிலைநாட்ட மனசாட்சியோடு செயல்படுமா  NIA ......

Post a Comment

0 Comments