தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

தொடர்ரயில் விபத்து பாஜக ஆட்சியில் தகுதி இல்லாத பணியாளர்கள் பணி நியமனம்

பாஜக ஆட்சிக்கு வந்து நடைபெற்ற ரயில் விபத்துக்கள் எண்ணிக்கை 

2012: மே 22 அன்று சரக்கு ரயிலும், ஹூப்ளி-பெங்களூரு ஹம்பி எக்ஸ்பிரஸும் ஆந்திராவில் மோதிக்கொண்டதில் 25 பேர் உயிரிழந்தனர்.

·  2014: மே 26 அன்று, உத்தர பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் பகுதியில், கோரக்பூர் நோக்கிச் சென்ற கோரக்தாம் எக்ஸ்பிரஸ், கலிலாபாத் நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர்.

·  2016: உத்தரபிரதேசத்தில் நவம்பர் 20 அன்று, இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.10 மணியளவில் கான்பூரின் புக்ராயன் அருகே தடம் புரண்டதில் 146 பேர் உயிரிழந்தனர்.

· 2017: ஜனவரி 21 அன்று, ஜக்தல்பூரில் இருந்து புவனேஸ்வர் செல்லும் ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ், விஜயநகரத்தில் உள்ள குனேரு கிராமத்தின் அருகே தடம் புரண்டதில் 41 பேர் உயிரிழந்தனர்.

·  2017: ஆகஸ்ட் 19 அன்று பூரி-ஹரித்வார் உத்கல் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் தடம் புரண்டதில் 23 பேர் உயிரிழந்தனர்.

· 2017: ஆகஸ்ட் 23 அன்று, உத்தர பிரதேசத்தின் அவுரியா அருகே டெல்லி செல்லும் கைஃபியத் எக்ஸ்பிரஸின் ஒன்பது ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்தனர்.

· 2018: அமிர்தசரஸில் தசரா திருவிழாவிற்காக தண்டவாளத்தில் கூடியிருந்த கூட்டத்தின் மீது பயணிகள் ரயில் மோதியதில் 59 பேர் உயிரிழந்தனர்.

2023, 280 பேரை பலி கொண்ட கோர ரயில் விபத்து.

2023, மீண்டும் ஆந்திராவில் தற்போது ஏற்பட்டுள்ள ரயில் விபத்தின் பலி எண்ணிக்கை தற்போது வரை 20வேர் என்று கூறப்படுகிறது.

பாஜக ஆட்சியில் இப்படி தொடர் ரயில் விபத்துக்கள் நிகழ்வதற்கு தகுதி இல்லாத மேலும் ஆளும் பாஜக அரசியல் செல்வாக்கினால் Rss உதவியோடு வேலையில் சேர்ந்த பல்வேறு வடமாநில பணியாளர்களின் அலட்சியப் போக்குதான் தொடரும் பல்வேறு ரயில் விபத்துகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் தென் மாநிலங்களில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் அந்த மாநில மக்களுடைய வேலைவாய்ப்பு சதவீதத்தை முற்றிலும் புறம்தள்ளிவிட்டு வடமாநில பணியாளர்கள் திட்டமிட்டு ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் பாஜக அரசு செயல்பட்டுள்ளது என்று மாநில உரிமைகள் மீது அக்கறை கொண்ட சமூக அமைப்புகள் குற்றம் சாட்டுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கிகள், தபால் நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் 90 சதவீம் வடமாநில பணியாளர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இதில் முற்றிலும் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது ..

அது மட்டுமின்றி  தமிழகத்தில் செயல்படும் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதத்திற்கு மேல் வட மாநில பணியாளர்களே பணியில் சேர்க்கப்படுகிறார்கள் ..இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டாலும் இந்த முறைகேடுகள் சம்பந்தமாக எந்த ஒரு சரியான நடவடிக்கையும் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படவில்லை ....

இந்நிலையில் தான் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு தகுதி இல்லாத பணியாளர்கள் ரயில்வே துறையில் சேர்க்கப்பட்டுள்ளதும். அவர்களுடைய கல்விச் சான்றுகள் உண்மைத்தன்மை பற்றி முறையான ஆய்வு நடத்தப்படாததுமே மிகப்பெரிய உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளஇந்த ரயில்விபத்து என்று கூறப்படுகிறது ..

இது சம்பந்தமாக தற்போதைய மத்தியஅரசு தவறுகளை தொடர்ந்து மூடி மறைக்கவே பார்க்கிறது ..

ஆனால் நியாயமான நடவடிக்கை எடுப்பதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இதற்கான உரிய முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உகந்தது என்று சமூக அக்கறைகொண்ட பொதுநல விரும்பிகளால் கூறப்படும் கூற்றாக உள்ளது ..

ஆட்சி மாற்றம் வருமா!  அனைத்து ஊழலும் வெளிவருமா! !பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ..

நன்றி அன்புடன் மக்கள்தொண்டன் 

Post a Comment

0 Comments