தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

முத்துராமலிங்க தேவர் அவர்களும் ||மக்கள் நல பங்களிப்பும்..

ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடந்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர்.
பிறப்புபசும்பொன் உக்கிரபாண்டி முத்துராமலிங்கத் தேவர்
அக்டோபர் 301908
பசும்பொன்இராமநாதபுரம்சென்னை மாகாணம்பிரித்தானியாவின் இந்தியா (தற்போது தமிழ்நாடுஇந்தியா)
இறப்பு30 அக்டோபர் 1963 (அகவை 55)
கல்லறைபசும்பொன்இராமநாதபுரம்தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தெய்வத் திருமகன்
பணிவிவசாயம்அரசியல்வாதி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு 1939 வரை
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்
சமயம்இந்து
பெற்றோர்உக்கிரபாண்டி தேவர்
இந்திராணி அம்மையார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர், பிறந்த போது தன்னுடைய தாயை இழந்தார்.குழந்தை சிறுவயது முதல் முஸ்லிம் தாயார் ஆயிசா இவருக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்த்துவந்தார்.

  அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி, தேவருடன் இணைந்து தொடங்கியதாகும். இவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[3][4][5]

1957-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான இவரை, மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்குப் பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டுப் பின்னர் இந்தக் கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா? என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்..

தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய நிலங்களில் வேலை பார்த்த ஏழை விவசாயிகளுக்கு ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு தானமாக கொடுத்தவர் முத்துராமலிங்க தேவர் அவர்கள்.

இவரை ஒரு குறிப்பிட்டசமூகம் கொண்டாடுவது அந்த சமூகத்தின் தலைவராக அவரை ஏற்றுக் கொண்டு.ஆனால் அவரோ அனைத்து மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட தியாகி அரசியலும் ஆன்மீகமும் இரு கண்கள் என்று கூறியவர்.

நேதாஜி படையின் ராணுவ தளபதியாக இருந்த சாமவாஸ் அவர்களோடு தேவர் அவர்களுக்கு மிகுந்த நட்புஉண்டு முத்துராமலிங்க தேவர் அவர்களுடைய ஆன்மீக சிந்தனையில் இஸ்லாமிய சமூகத்திற்கு மிகப்பெரிய இடம் கொடுத்திருந்தார். எப்பொழுதும் முஸ்லிம்களுன் நல்லிணக்கத்தை பேணிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments