தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

கோவை அரசுப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் மத துவேசம் பாகுபாடு காட்டிய ஆசிரியை

கோவையில் அரசு பெண்கள் பள்ளியில் 7 வது வகுப்பில் படிக்கும் முஸ்லிம் மாணவி ஆயிஷா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த மாணவியை அந்த பள்ளியின் ஆசிரியைகள் மிகவும் வெறுப்புடன் நடத்தி வந்ததால் அந்த மாணவி தனது பெற்றோர் இடம் தெரிவித்து இருக்கிறார்.‌ 
   ‌
அந்த மாணவியின் வகுப்பு ஆசிரியை அபிநயா 
 இந்த குறிப்பிட்ட முஸ்லிம் மாணவியிடம் அவளது தந்தை செய்யும் தொழில் குறித்து கேள்வி எழுப்ப அந்த மாணவி ( ஆயிஷா) எனது அப்பா முக்தார் பீப் ஸ்டால் வைத்து இருப்பதாக கூறி இருக்கிறார். அதற்கு அவளின் பள்ளி ஆசிரியை அபிநயா உனது அப்பா மாட்டு இறைச்சி கடை வைத்து இருப்பதால் நீ மாட்டிறைச்சி தின்ற திமீறில் ஒவாரா ஆடுகிறாயா என்று கேள்வி எழுப்ப , பதிலுக்கு அந்த மாணவி ஏன் டீச்சர் எங்க அப்பா, அம்மா குறித்து எல்லாம் பேசுறீங்க என்று எதிர் கேள்வி எழுப்ப விவகாரம் பள்ளி தலைமை ஆசிரியர்  ராஜேஸ்வரியிடம் சென்றது மட்டுமல்லாமல் காவல்துறை வந்து பிரச்சினை பெரிதாகமல் சமாதானம் செய்து வைத்து உள்ளார்கள்.‌
     அதற்கு பிறகு பள்ளிக்கு சென்ற அந்த முஸ்லிம் மாணவியிடம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அவளது வகுப்பு ஆசிரியை என்ன தைரியம் இருந்தால் எங்களை குறித்து போலீஸ் இடம் புகார் கொடுத்து இருப்பாய் என்று கூறியது அல்லாமல் ஷீவை துடைக்க வேண்டும் என்று தண்டனை வழங்கி உள்ளார்கள்.
 மேலும் பள்ளிக்கு சென்ற ஆயிஷாவை, ‘என் மீதே புகார் கொடுக்குறியா’ என்று கூறி ஆசிரியை அபிநயா மீண்டும் திட்டியுள்ளார். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி காலை நேர பள்ளி மாணவர் கூடுகையில் (Prayer) ‘7ம் வகுப்பு முஸ்லிம் மாணவி ஒருவர் புகார் கொடுத்து அட்டகாசம் செய்கிறார், இது போன்று யார் வந்தாலும் டி.சி. (மாற்றுச் சான்றிதழ்) கொடுத்து அனுப்பி விடுவேன்,’ என்று எச்சரித்துள்ளார்.
     இந்த நிலையில் ஆயிஷாவின் அப்பா ஆசிரியர்களின் இதுபோன்ற செயல்களால் என் மகளை சக மாணவிகள் வேறுமாதிரி பிரித்து பார்ப்பதுடன், புர்காவை கழற்றி ஷூக்களை (காலணிகளை) சுத்தம் செய்ய வைத்துள்ளனர். சக மாணவிகளின் மனநிலை இப்படி மாறுவதற்கு ஆசிரியர்கள் தான் காரணம், இந்தச் சம்பவங்களால் என் மகள் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்,’’ என்கிறார் மாணவியின் தந்தை முக்தார்.

இந்த மத வெறுப்பு, தொழில் சார்ந்த வெறுப்பு ஆசிரியையிடம் உருவானால் பள்ளி எப்படி உருப்படும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற அசிங்கமான , நாசகார சக்திகளை பள்ளியில் அனுமதித்தால் மதக் கலவரங்கள், சாதிய கலவரங்கள் தான் நிச்சயமாக ஏற்படக்கூடிய வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 
        பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்து சமூகத்தில் அமைதியை உருவாக்க அரசு முயல வேண்டும்.. 
     நாட்டின் ஒற்றுமை, தேசத்தின் உறுதியான பாதுகாப்பு , மாணவர்களிடையே அன்பு, சமாதானம் மற்றும் நல்லிணக்க சிந்தனைகளை உருவாக்குவதில் பெரும் பங்கு ஆற்ற வேண்டிய நிலையில் இருக்கும் ( ஆசிரியர்கள்)  , அதாவது வேலியே பயிரை மேய்ந்த கதையாகி வருவது‌ ஆபத்தான முன்ணுதாரணமாக ஒரு போதும் அமைந்து விடக்கூடாது என்பதே அனைவரின் கலவையாக உள்ளது

Post a Comment

0 Comments