தொண்டிநியூஸ்.com

தொண்டிநியூஸ்.com

முஸ்லிம் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்ட 30 நிமிட தொழுகைக்கான இடைவேளை நேரம் ரத்து

ராஜ்யசபா தலைவரும், துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர், பார்லிமென்டில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதிக்கப்பட்ட கூடுதல் 30 நிமிட இடைவெளியை ரத்து செய்யும் முடிவை அறிவித்துள்ளார்.

 காந்தி தேசம் காவி தேசமானது...
 சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பல்வேறுசமூக மக்களுக்கான பன்முகத்தன்மை தொடர்ந்து பாதுகாக்கபட்டு வந்த நிலையில்.. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அது முற்றிலும் காலில் போட்டுநசுக்கப்பட்டுள்ளது.
 நேற்றைய தினம் இனி வெள்ளிக்கிழமைகளில் உணவுக்காகவிடும் இடைவேளை நேரம் போக கூடுதல் 30 நிமிடம் தொழுகைக்காக முஸ்லிம் உறுப்பினர்கள் பயன்படுத்தி வந்த நேரத்தை ரத்து செய்து மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில்  பாசிச பாஜக அரசின் முஸ்லிம் விரோத போக்கை நிலை நாட்டியுள்ளனர்.
 பெயரளவில் இந்தியா மதச்சார்பற்ற நாடாக கூறப்பட்டாலும் தற்போது உள்ள சூழலில் மதவாத இந்துத்துவா வெறியாட்டம் தலைவிரித்து ஆடுவதை பாஜகவின் ஜக்தீப் தன்கர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
 இது பாஜக அரசின்  மிகக் கேவலமான சிந்தனையை செயல்பாட்டை காட்டுவதாகவே பொதுவான நடுநிலையான சிந்தனையாளர்களின் கருத்தாக உள்ளது. இது போன்ற செயல்பாடுகள் அதிகரிப்பதால் 
 சர்வதேச உலகம் வரும் காலங்களில் இந்தியாவை தனிமைப்படுத்தும் சூழல் உருவாகி விடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

 தந்தி நியூஸ் வீடியோ லிங்க் காந்தி தேசமே காவல் இல்லையா

Post a Comment

0 Comments